Published:Updated:

`அன்பே... எல்லாம் சரியாகிவிடும்' -ரூ.200 கோடி பணமோசடி சர்ச்சைக்குப் பிறகு ஜாக்குலினின் பதிவு

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்

ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை, 9 லட்சம் மதிப்புள்ள அபூர்வமான பூனை, விலை உயர்ந்த பேக், தங்க ஆபரணங்கள் போன்றவற்றைப் பரிசாக அளித்த சுகேஷ். பணமோசடி சர்ச்சைக்குப் பிறகு நடிகை ஜாக்குலினின் பதிவு

டெல்லியை மையமாகக்கொண்ட ரான்பாக்ஸி என்ற மருந்து கம்பெனியின் தொழிலதிபரை சிறையிலிருந்து விடுவிப்பதாகக் கூறி மருந்து கம்பெனியின் உரிமையாளர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்தது தொடர்பான வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா உட்பட மொத்தம் எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகருடன் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கப் பிரிவு நடத்திய விசாரணையில் நடிகை ஜாக்குலின், சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருள்களைப் பெற்றது தெரியவந்திருக்கிறது. இதில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை, 9 லட்சம் மதிப்புள்ள அபூர்வமான பூனை, விலை உயர்ந்த பேக், தங்க ஆபரணங்கள் போன்ற விலை உயர்ந்தப் பரிசுப் பொருட்கள் அடங்கும் என்று கூறப்படுகிறது.

ஜாக்குலினின் இன்ஸ்டாகிராம் பதிவு
ஜாக்குலினின் இன்ஸ்டாகிராம் பதிவு

இந்த சர்ச்சையை அடுத்து நடிகை ஜாக்குலின், சுகேஷ் சந்திரசேகர் இருவரின் நெருக்கமானப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இது பற்றி நடிகை ஜாக்குலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். அதில், "நான் எல்லா நல்ல விஷயங்களுக்கும் தகுதியுடையவள். வலிமை கொண்டவள். என்னை நான் ஏற்றுக் கொள்கிறேன். எல்லாம் சரியாகிவிடும். என்ன நடந்தாலும் நிச்சயமாக நான் எனது லட்சியங்களை நோக்கித் தொடர்ந்து பயணிப்பேன்" என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.