Published:Updated:

சுய ஊரடங்கு தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு... தமிழக அரசு அறிவிப்பு! #JantaCurfew

ஊரடங்கு
ஊரடங்கு

சுய ஊரடங்கு லைவ் அப்டேட்ஸ்!

22 Mar 2020 1 PM

சுய ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிப்பு!

சுய ஊரடங்கு தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு... தமிழக அரசு அறிவிப்பு! #JantaCurfew

சுய ஊரடங்கை தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொது மக்களின் நலன்கருதி, நாளை காலை 5 மணி வரை மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் அத்தியாவசியப் பணிகளுக்குத் தடையில்லை என்றும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

22 Mar 2020 1 PM

ஆதரவற்றவர்களுக்கு முக கவசத்துடன் உணவு!

கொரோனா பரவலைத் தடுக்கும் பிரதமர் அறிவித்த ஊரடங்கை முன்னிட்டு, மதுரையில் காப்பகத்துக்கு அழைத்துச்செல்லாத சாலையோர ஆதரவற்றவர்களுக்கு, செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து தன்னார்வ அமைப்புகள், முகக்கவசமும், உணவும், குடிநீரும் வழங்கினர். படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்

22 Mar 2020 1 PM

விருதுநகர் புகைப்படங்கள்

22 Mar 2020 1 PM

ஆள் நடமாட்டம் இல்லா கோயம்பேடு!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் சுய ஊரடங்கின் ஒரு பகுதியாக, வெறிச்சோடிய சென்னை கோயம்பேடு மேம்பாலம். படங்கள் - ஸ்ரீனிவாசுலு

22 Mar 2020 12 PM

குஜராத் சாலைகளில் தூய்மைப் பணி!

குஜராத் மாநிலத்தில், அனைத்து சாலைகளும் மூடப்பட்டு சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. காலியாக உள்ள சாலைகளில் சுகாதாரப் பணியாளர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்துவருகிறார்கள். அங்கு, இதுவரை 14 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

22 Mar 2020 12 PM

வைரஸ் பரவுதலின் சங்கிலியை ஒன்றாக உடைப்போம்!

‘சுய ஊரடங்கைக் கடைப்பிடித்து வீட்டுக்குள் தங்கிய அனைவருக்கும் நன்றி. வைரஸ் பரவுதலின் சங்கிலியை ஒன்றாக உடைப்போம். ஒருவருக்கொருவர் கவனித்துக்கொள்வோம். இனிய ஞாயிறு வாழ்த்துகள்” என்று தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

22 Mar 2020 10 AM

வீட்டுக்குள் ஆரோக்கியமாக இருங்கள் - மோடி

‘தற்போது முதல் நாடு முழுவதும் ஜனதா ஊரடங்கு தொடங்குகிறது. கொரோனா அச்சுறுதலுக்கு எதிரான போராட்டத்துக்கு மிகப் பெரிய பலத்தை வழங்கும் இந்த ஊரடங்கின் ஒரு பகுதியாக நாம் அனைவரும் இருப்போம். இப்போது நாம் முன்னெடுக்கும் பணிகள், வரவிருக்கும் காலங்களில் நமக்கு உதவும். வீட்டுக்குள் ஆரோக்கியமாக இருங்கள்’ என்று சுய ஊரடங்கு தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி, ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

22 Mar 2020 10 AM

சுய ஊரடங்கில் பங்கேற்காத மும்பை மக்கள்!

மும்பை நகரம் எப்போதுமே தூங்காது என்று கூறுவார்கள் அந்த அளவுக்கு மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இன்று ஜனதா ஊரடங்கையொட்டி மும்பை நகரின் சில சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மற்றொரு புறம் மும்பை நகரில் இயங்கும், உள்ளூர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் இருந்தது. அவர்கள் சுய ஊரடங்கில் பங்கேற்காமல் எப்போதும் போல ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்தனர். இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனானாவால் பாதிக்கப்பட்ட அதிக நோயாளிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

22 Mar 2020 9 AM

பொதுமக்களுக்கு மலர் கொடுக்கும் போலீஸ்!

நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் டெல்லியில் ஒரு சில பொதுமக்கள் சாலைகளில் சுற்றி வந்துள்ளனர். அவர்களுக்கு மலர் கொடுத்து வீட்டிலேயே இருந்து பிறரின் நலனுக்கு உதவும் படி டெல்லி போலீஸார் கேட்டுக்கொண்டனர்.

22 Mar 2020 9 AM

கோவை புகைப்படங்கள்!

22 Mar 2020 9 AM

ஊரடங்கு காரணமாக தமிழகம் வெறிச்சோடி கிடக்கிறது. இந்நிலையில் மதுரையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.

22 Mar 2020 9 AM

காலியான புதுக்கோட்டை!

22 Mar 2020 9 AM

சென்னை அண்ணாசாலை!

22 Mar 2020 9 AM

கேரளாவில் இருந்து வந்த வெளிமாநிலத்தவர்கள் ஊருக்கு போக ரயில் இல்லாததால் சென்ட்ரல் ரயில் நிலையம் வெளியே உட்கார்திருக்கிறார்கள்!

22 Mar 2020 9 AM

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் சுய ஊரடங்கு. வெறிச்சோடிய சாலைகள்; இடம் : பழைய பேருந்து நிலையம்

22 Mar 2020 9 AM

காற்று வாங்கும் காசிமேடு துறைமுகம்!

22 Mar 2020 9 AM

ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி இருக்கும் ராமேஸ்வரம்!

22 Mar 2020 7 AM

தொடங்கிய சுய ஊரடங்கு!

கொரோனா பாதிப்பு தீவிரமாகாமல் தடுக்கப்பட வேண்டி, இன்று (22/03/2020) ஒருநாள் மட்டும் காலை 7 முதல் இரவு 9 மணி வரை, 14 மணி நேரத்துக்கு பொதுமக்கள் அனைவரும் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென சில தினங்களுக்கு முன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவரின் அறிவிப்புக்கு ஏற்ப மாநில அரசுகளும் மக்களை ஊரடங்கை கடைபிடிக்கும் வகையில் சில ஏற்பாடுகளை செய்ததது. இந்நிலையில் காலை 7 மணிக்கு முன்னதாகவே ஊரடங்கு தொடங்கியது.

காலையிலேயே நகர பகுதிகள் வழக்கத்திற்கும் மாறாக காணப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகளும், பயணிகளும் இல்லாமல் வெறிச்சோடியது. சென்னையிலும் மக்கள் கூட்டம் காணப்படவில்லை. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

கொரோனா வைரஸை தடுக்க சுய ஊரடங்கு உத்தரவு இடம் : பெருங்களத்தூர் பேருந்து நிலையம்

Posted by Vikatan EMagazine on Saturday, March 21, 2020
அடுத்த கட்டுரைக்கு