Published:Updated:

பால்கோட்டில் மீண்டும் தீவிரவாதப் பயிற்சி! - இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்?

இந்தியா தாக்குதல் நடத்திய பால்கோட் ஜெயிஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்களில் மீண்டும் பயிற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Balakot attaack
Balakot attaack

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

Balakot attaack
Balakot attaack

பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியதாகவும் பல தீவிரவாதிகள் இறந்ததாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் இந்தியாவின் கருத்தை முற்றிலும் மறுத்து வந்தது பாகிஸ்தான். இருந்தும் உலக நாடுகள் பல இந்தியாவுக்கு ஆதரவு அளித்து, ஜெயிஷ்-இ-முகமது அமைப்பு உலகளவில் தடைசெய்யப்பட்டது. இந்நிலையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய ஜெயிஷ்-இ-முகமது முகாம்களில் மீண்டும் பயிற்சி நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vikatan

பால்கோட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு ஏறக்குறைய 7 மாதங்கள் ஆன நிலையில் அதே முகாம்களை, பயங்கரவாதிகள் மீண்டும் புதுப்பித்து வருவதாகவும் அங்கு 40 ஜிஹாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த அமைப்பு ஜம்மு-காஷ்மீர் உட்பட இந்தியாவில் மேலும் 40 இடங்களில் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகே இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Balakot attaack
Balakot attaack

மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான், தீவிரவாதிகள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் ஐ.நா மாநாட்டில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்துக்கு எதிராக பிரதமர் மோடி பேசவுள்ளார். அதே மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.