Published:Updated:

`காத்துவாக்குல ரெண்டு காதல்' - காதலிகள் இருவரையும் ஒரே நேரத்தில் கரம்பிடித்த இளைஞர்!

சந்தீப் ஓரான் - குசும் லக்ரா- ஸ்வாதி குமாரி ( ட்விட்டர் )

`காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலிப்பார். இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்புவார். அதே போன்ற ஒரு சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்திருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம், லோஹர்டகாவிலுள்ள பந்தா கிராமத்தில் வசித்துவருபவர் சந்தீப் ஓரான். இவரும், குசும் லக்ரா என்ற பெண்ணும் தீவிரமாகக் காதலித்துவந்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்துவந்திருக்கின்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில், சந்தீப் மேற்கு வங்கத்துக்கு செங்கல் சூளையில் வேலை செய்வதற்குச் சென்றிருக்கிறார்.

அங்கு ஏற்கெனவே வேலை செய்துகொண்டிருக்கும் ஸ்வாதி குமாரி என்ற பெண்ணுடன் நட்புரீதியாகப் பழகிவந்திருக்கிறார். ஆனால் காலப்போக்கில் அது காதலாக மலர்ந்திருக்கிறது. அங்கு ஸ்வாதி குமாரியுடன் தங்கியிருந்திருக்கிறார். இந்த விவகாரம் பந்தா கிராமவாசிகளுக்கு தெரியவந்தது. அதனால் கிராமத்தில் சந்தீப் ஓரானுக்குக் கடும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. ஆனாலும், ஸ்வாதி குமாரியை கிராமத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்.

சந்தீப் ஓரான் - குசும் லக்ரா- ஸ்வாதி குமாரி திருமணம்
சந்தீப் ஓரான் - குசும் லக்ரா- ஸ்வாதி குமாரி திருமணம்
ட்விட்டர்

தொடர் சண்டைக்குப் பிறகு, கிராம மக்கள் பஞ்சாயத்து செய்து, சந்தீப் ஓரானை இரு பெண்களுக்கும் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தனர். சந்தீப் ஓரானுக்கு ஏற்கெனவே திருமணமாகாமல் குழந்தை இருக்கிறது என்பதை அறிந்தும் ஸ்வாதி ஓரானை ஏற்றுக்கொண்டார். முதல் காதலி குசும் லக்ராவும் இவர்களின் காதலை ஏற்றுக்கொண்டார். மேலும், கிராம மக்களின் முன்னிலையில் இரண்டு பெண்களின் சம்மதத்துடன் சந்தீப் ஓரான் திருமணம் செய்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து, தனியார் செய்தி நிறுவனத்துக்கு சந்தீப் ஓரான் பேட்டியளித்தபோது, "இரண்டு பெண்களை ஒன்றாகத் திருமணம் செய்துகொள்வதில் சட்டச் சிக்கல் இருக்கலாம். ஆனால் நான் இருவரையும் நேசிக்கிறேன். அவர்களில் யாரையும் விட்டுவிட முடியாது" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism