Published:Updated:

"கோவிட் தடுப்பூசியால் மீண்டும் பேசவும், நடக்கவும் முடிகிறது?!" - ஆச்சர்யப்பட்ட மருத்துவர்கள்!

கோவிட் தடுப்பூசி
News
கோவிட் தடுப்பூசி

இரு நாட்களுக்குப் பிறகு தன்னால் கால்களை அசைக்க முடிவதாகவும், பேச முடிவதாகவும் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 55 வயது நபர் கோவிட்ஷீல்டு முதல் தவணையை எடுத்துக் கொண்டதும் தனது முடக்குவாதத்திலிருந்து குணமடைந்துள்ளதாகக் கூறுகிறார். டலர்சன்ட் முண்டா ஜார்கண்டின் பொக்காரோ மாவட்டம் வசித்து வந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் பேச்சு திறனை இழந்திருக்கிறார். முடக்குவாத நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அங்கன்வாடி ஊழியர் ஒருவர், டலர்சன்ட் முண்டாவுக்கு கோவிட் தடுப்பூசியை ஜனவரி 4-ல் வீட்டிற்கு வந்து செலுத்தியுள்ளார். இரு நாட்களுக்குப் பிறகு தன்னால் கால்களை அசைக்க முடிவதாகவும், பேச முடிவதாகவும் கூறியுள்ளார்.

டலர்சன்ட் முண்டா கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு
டலர்சன்ட் முண்டா கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு

படுத்த படுக்கையாக இருந்தவருக்கு தடுப்பூசி தான் வாழ்க்கை கொடுத்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். பொக்காரோவை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் இந்த நிகழ்வை 'அதிசயமான மீட்சி ' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழு இதை ஆராய அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக முண்டா முதுகுத் தண்டு பிரச்னைகளால் அவதிப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவர்கள் மத்தியில் இந்த நிகழ்வு அதிசயமாக பார்க்கப்படுகிறது. முண்டாவின் மருத்துவ அறிக்கையை ஆராய்ந்து இதற்கான தகுந்த விளக்கத்தை வழங்குவதாகவும் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz