Published:Updated:

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.18 கோடி மோசடி... ஜார்க்கண்ட் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கைது

பூஜா சிங்கால்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜாவிடமிருந்து ரூ. 19 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு பூஜா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.18 கோடி மோசடி... ஜார்க்கண்ட் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கைது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜாவிடமிருந்து ரூ. 19 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு பூஜா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
பூஜா சிங்கால்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்கப் பிரிவுச் செயலாளராக இருந்தவர் பூஜா சிங்கால். 2000-ம் ஆண்டு பதவிக்கு வந்ததிலிருந்தே ஊழல் செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. பூஜா பண மோசடி மற்றும் ஊழலில் ஈடுபடுவதாகக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் மூத்த வழக்கறிஞர் சஞ்சீவ் குமார் அமலாக்கப் பிரிவில் புகார் செய்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திவந்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி பூஜாவுக்குத் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் திடீரென ரெய்டு நடத்தினர். பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உட்பட மொத்தம் 18 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் 19 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 17.49 கோடி ரூபாய் ஆடிட்டர் சுமன் குமார் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சுமன் குமார், பூஜாவின் ஆடிட்டர். சுமன் குமார் அன்றே கைதுசெய்யப்பட்டார்.

பூஜா சிங்கால்
பூஜா சிங்கால்

இதையடுத்து முதன்முறையாக பூஜாவை அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் மீண்டும் கடந்த 11-ம் தேதி இரண்டாவது முறையாக அமலாக்கப் பிரிவு அவரை விசாரணைக்கு அழைத்தது. பூஜா, அவரின் கணவரிடம் எட்டு மணி நேரத்துக்கும் மேல் நடத்தப்பட்ட விசாரணையில் பூஜா பண மோசடிச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். அவர் தன் கணவர் அபிஷேக், ஆடிட்டர் சுமன் குமார் ஆகியோரின் துணையோடு பதவிக்கு வந்த நாளிலிருந்து தான் வகித்த அனைத்துப் பதவிகளிலும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். 2007-13-ம் ஆண்டு வரை பூஜா ஜார்க்கண்ட் மாநிலத்தில் துணை கமிஷனர், மாவட்ட நீதிபதி எனப் பல பதவிகளில் இருந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலும் பல ஊழல்களைச் செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஊழல் வெளியில் வந்தது எப்படி?

கடந்த 2012-ம் ஆண்டு ஜார்க்கண்ட் ஜூனியர் இன்ஜினீயர் ராம் பிரசாத் சின்ஹா என்பவர்மீது பண மோசடி வழக்கு பதிவுசெய்யப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ராம் பிரசாத்தை வேறு ஒரு பண மோசடி தொடர்பாக கைதுசெய்து விசாரித்தனர். அவரும் அதிகாரத்தில் இருந்தபோது ரூ.18 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தியதில் 2007-13-ம் ஆண்டில் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூனியர் இன்ஜினீயராக இருந்தபோது குந்தி, சத்ரா, பலமு போன்ற மாவட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. அதோடு எந்த அரசு வேலையாக இருந்தாலும் அதில் ஐந்து சதவிகிதம் மாவட்ட நிர்வாகத்துக்கு வந்துவிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தனக்கு உத்தரவிட்டிருந்ததாக ராம்பிரசாத் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் பூஜா இந்த மாவட்டங்களில் துணை கமிஷனர், மாவட்ட நீதிபதி உட்பட பல பதவிகளில் இருந்தார். பூஜாவுக்கு இதில் முக்கியப் பங்கு இருந்ததாகத் தெரிவித்தார். ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் 2009-10-ம் ஆண்டில் பூஜா துணை கமிஷனராக இருந்தபோதுதான் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பூஜா 18 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 2008-11-ம் ஆண்டுகளில் பூஜா தனது வங்கியில் 1.43 கோடியை டெபாசிட்டாகப் பெற்றுள்ளார். அதில் 16.57 லட்சத்தைத் தன் நிதி ஆலோசகரும், ஆடிட்டருமான சுமன் குமார் வங்கிக் கணக்குக்கு டிரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார். தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பூஜாவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த பாஜக ஆட்சியில் பூஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று அவரை அரசு விடுவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. சுமன் குமாரிடம் விசாரித்தபோது `பூஜா சொல்பவரிடம் சென்று பணத்தை வாங்கி வருவேன்’ என்றும், நிலம் வாங்குவதற்காக பூஜாவின் கணவர் நடத்தும் மருத்துவமனை நிலத்தை வாங்க பில்டர் ஒருவருக்குக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism