Published:Updated:

"12 கோடி மக்கள் வாழும் மாநிலத்தில் பாலியல் வன்முறை நடப்பது பெரிய விஷயமல்ல"- பீகார் முன்னாள் முதல்வர்

பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சி ( ட்விட்டர் )

``பீகார் மாநிலத்தில் மக்கள் தொகை 12 கோடி. மக்கள் தொகை அதிகமாக இருக்கும் ஒரு மாநிலத்தில் பாலியல் வன்முறை நடப்பது பெரிய விஷயமல்ல." - பீகார் முன்னாள் முதல்வர்

பீகார் முன்னாள் முதலமைச்சரும் , ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் (HAM) தலைவருமான ஜித்தன் ராம் மாஞ்சி ஹாஜிப்பூர் கூட்டுப் பாலியல் வன்முறை பற்றிப் பேசிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பின்னர், ஜித்தன் ராம் மாஞ்சி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, செய்தியாளர்கள் ஹாஜிப்பூர் கூட்டுப் பாலியல் வன்முறை விவகாரத்தில் போலீஸாரின் விசாரணை குறித்துக் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், ``பீகார் மாநிலத்தில் மக்கள் தொகை 12 கோடி. மக்கள் தொகை அதிகமாக இருக்கும் ஒரு மாநிலத்தில் பாலியல் வன்முறை நடப்பது பெரிய விஷயமல்ல. நிறையப் பாத்திரங்கள் இருக்கும் அறையில் ஓசை வருவது இயல்புதான்" என்று கூறியிருக்கிறார்.

ஜித்தன் ராம் மாஞ்சி
ஜித்தன் ராம் மாஞ்சி

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக, ஜித்தன் ராம் மாஞ்சியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகாரின் ஹாஜிபூரில் சிறுமி ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோவை இணையத்தில் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஜித்தன் ராம் மாஞ்சி சர்ச்சையாகப் பேசியிருப்பது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.