Published:Updated:

`எனக்கு ட்விட்டர் அக்கவுன்ட்டே இல்ல; ஆனா, அதை ஹேக் பண்ணிட்டாங்க!' - குழப்பும் JNU துணைவேந்தர்

சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட்

ட்விட்டர் பதிவில் இந்திய கிறிஸ்தவர்களை அவதூறாகவும், குடியுரிமை செயற்பாட்டாளர்களை `மன நலம் குன்றியவர்கள்' என விமர்சித்தும் போடப்பட்டிருந்தது. இந்தப் பதிவுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவை நீக்கப்பட்டன.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக கல்லூரியின் முன்னாள் மாணவியான 59 வயதாகும் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் திங்கள்கிழமையன்று  நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருடைய பெயர் கொண்ட ட்விட்டர் பக்கத்திலிருந்து  சர்ச்சைக்குரிய விஷயங்கள் பகிரப்பட்டதை அடுத்து, சாந்திஸ்ரீ  தனக்கென ட்விட்டர் கணக்கு இல்லை என கூறியுள்ளார்.

சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட்
சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ட்விட்டர் பதிவில் இந்திய கிறிஸ்தவர்களை அவதூறாகவும், குடியுரிமை செயற்பாட்டாளர்களை `மன நலம் குன்றியவர்கள்' என விமர்சித்தும் போடப்பட்டிருந்தது. இந்தப் பதிவுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவை நீக்கப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்துக் கூறிய சாந்திஸ்ரீ, ``என்னிடம் ட்விட்டர் கணக்கு இல்லை, அதை யாரோ தேடி ஹேக் செய்துள்ளார்கள், ஜேஎன்யூ வில் உள்ள யாரோ ஒருவர் தான் இதைச் செய்துள்ளார். கல்லூரியில் முதல் பெண் துணைவேந்தராக நான் பொறுப்பேற்றதை  விரும்பாதவர்கள் தான் இதைச் செய்திருக்க வேண்டும்'' என்றும் தெரிவித்துள்ளார். 

சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட்
சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட்

ஆறு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய மகள் தனது ட்விட்டர் கணக்கை மூடியதாகவும், தற்போது  ட்விட்டர் பக்கத்தில் அவர் இல்லாததால் அவரின்  புகைப்படங்கள் பரவத் தொடங்கிய பிறகுதான்  என்ன நடப்பது என்பது  தெரிய வந்ததாகவும், கூறியுள்ளார். 

மேலும் இது குறித்து யாரும் தன்னிடம் சொல்லவில்லை, இந்த உலகில் எல்லோரும் சதிகாரர்கள்தான் என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism