Published:Updated:

அன்று தூய்மைப் பணியாளர், இன்று துணை ஆட்சியர்; யார் இந்த ஆஷா காந்தாரா?

ஆஷா காந்தாரா
ஆஷா காந்தாரா

``நான் செல்லும் இடங்களில் எல்லாம், `நீ என்ன பெரிய கலெக்டரா?' என்று கேட்பார்கள். கலெக்டர் என்றால் என்வென்று எனக்கு அப்போது தெரியாது. அதனால், கூகுளின் உதவியுடன் அது என்னவென்று தெரிந்து கொண்டேன்."

ஆஷா காந்தாரா... இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான இவர் கணவரால் கைவிடப்பட்டவர். ஜோத்பூரின் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றியவர், தனது விடா முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் இன்று துணை ஆட்சியராக உயர்ந்துள்ளார். ஆஷாவின் கடின உழைப்பயும், விடாமுயற்சியையும் தேசமே பாராட்டி வருகிறது.

1997-ல் தனது பள்ளிப் படிப்பை முடித்த ஆஷாவுக்கு 17 வயதில் திருமணமாகியுள்ளது. தனது இரண்டு குழந்தைகளுடன் கணவரால் 2012-ம் ஆண்டு கைவிடப்பட்டார் ஆஷா. தன் பெற்றோரின் உதவியால் 2016-ம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்தார். ஆனாலும் அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.

RPSC
RPSC
https://rpsc.rajasthan.gov.in/
தந்தை விவசாயி; மகள்கள் 5 பேரும் அரசு அதிகாரிகள்; ராஜஸ்தான் சகோதரிகளுக்கு குவியும் பாராட்டு!

``நான் செல்லும் இடங்களில் எல்லாம், `நீ என்ன பெரிய கலெக்டரா?' என்று கேட்பார்கள். கலெக்டர் என்றால் என்வென்று எனக்கு அப்போது தெரியாது. அதனால், கூகுளின் உதவியுடன் அது என்னவென்று தெரிந்து கொண்டேன். அதன் பிறகு, சிவில் சர்வீசஸ் தேர்வெழுத விரும்பினேன். ஆனால், வயது வரம்பு காரணமாக என்னால் அதை எழுத இயலாது என்று அறிந்துகொண்டேன். இன்னொரு பக்கம், RAS தேர்வெழுத (Rajasthan Administrative Service examination) விவாகரத்தான மற்றும் கைம்பெண்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டிருந்ததை அறிந்தேன். அந்தத் தேர்வை எழுத முடிவெடுத்தேன்" என்கிறார் ஆஷா.

மூன்று வருடங்களுக்கு முன்பு RAS நுழைவுத் தேர்வை எழுதி, அத்தேர்வின் முடிவு வருவதற்குள்ளாகவே ஜோத்பூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை கிடைத்த நிலையில், அப்பணியில் சேர்ந்துள்ளார் ஆஷா. காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலைபார்க்க வேண்டும். மாதம் ரூ.12,500 சம்பளம். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஆர்வத்துடன் படித்துள்ளார். அவர் விடாமுயற்சிக்கும் கடுமையான உழைப்புக்கும் பலனாக, தேர்வில் வெற்றிபெற்றுவிட்டார் ஆஷா.

Women - Representational Image
Women - Representational Image
Image by Daniel Reche from Pixabay

மேயர் குந்தி திவ்ரா, ``ஆஷா தூய்மைப் பணியாளராக இருந்து RAS ஆதிகாரியாக உயர்ந்துள்ளதில் மிகவும் ஆனந்தம் கொள்கிறோம். அவர் கடுமையான உழைப்பாளி. வரும் காலகட்டத்தில் எங்களது நகராட்சியின் சீனியர் ஆபீஸராக அவர் பணியாற்றினால் அது எங்களுக்கு மகிழ்ச்சி, பெருமை" என்றார்.

``RAS-ல் 15 வருடங்கள் பணியாற்றினால் அனுபவத்தின் அடிப்படையில் கலெக்டர் ஆக வாய்ப்புண்டு என்கிறார்கள். ஆம்! என் கலெக்டர் கனவு இன்னும் என்னை விட்டுச் செல்லவில்லை" என்கிறார் ஆஷா.

- ஹரிணி ஆனந்தராஜன்

அடுத்த கட்டுரைக்கு