மேற்கு வங்க மாநிலத்தில் குரல்ஜூரி என்னும் கிராமத்தில் சைக்கிளில் வேர்க்கடலை விற்று வந்த பூபன் பத்யாகர் ‘Kacha Badam’ எனும் பாடல் மூலம் சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வந்தார். இவர் தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் தனது வாகனத்தை எடுக்கும்போது எதிர்பாராத விதமாக வாகனம் சுவரில் மோதியது. இதில் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முகத்தில் லேசான காயம் ஏற்பட்டிருந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சிறிது நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இவருக்கு மனைவி , இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். ‘Kacha Badam’ பாடலுக்குப் பிறகு வேர்க்கடலை வியாபாரியிலிருந்து தற்போது படகராக மாறியுள்ள இவர் முன்பிருந்த வேர்க்கடலை வியாபாரத்தை விட்டுவிட்டு முழுநேரப் பாடகராக மாறவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். மேலும் சவ்ரவ் கங்குலியுடன் இணைந்து பாடல் ஒன்றிலும் இவர் பணியாற்ற இருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
