Published:Updated:

`இந்திரா ஜெய்சிங்கை அந்த குற்றவாளிகளுடன் சிறையிலிடுங்கள்!’- நிர்பயா வழக்கில் கங்கனா ரனாவத் ஆவேசம்

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

பாலியல் வன்கொடுமை செய்பவர்களை பொது வெளியில் தூக்கிலிடவேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் ஜனவரி 22-ம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ், தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இதை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். இந்த தாமதத்தினால் தூக்குத் தண்டனை பிப்ரவரி 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள நடிகை கங்கனா ரனாவத், ``மகளை இழந்த சோகத்தில் நிர்பயாவின் பெற்றோர்கள் இத்தனை வருடங்களாக தவித்து வருகிறார்கள். குற்றவாளிகளை சத்தமே இல்லாமல் கொலை செய்வதில் (தூக்குத் தண்டனை) என்ன பயன் இருக்கப்போகிறது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும். இந்த நேரத்தில் குற்றவாளிகளிடம் அனுதாபம் காட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் ஒரு மைனர் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு துணிந்த ஒரு நபரை மைனர் என எப்படி அழைக்கலாம். பாலியல் வன்கொடுமை செய்பவர்களை பொது வெளியில் தூக்கிலிடவேண்டும்.

`16 ஆண்டுக்கால நட்பு... எமனாக வந்த ஹீட்டர்!’ - 8 பேர் மரணம் குறித்து விவரிக்கும் ரிசார்ட் ஊழியர்

இந்திரா ஜெய்சிங் போன்ற பெண்களை அந்தக் குற்றவாளிகளுடன் நான்கு நாள்கள் சிறையில் அடைக்க வேண்டும். அவர்களுக்கு கண்டிப்பாக அது தேவை. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொலைகாரர்கள் மீது அனுதாபம் காட்டுபவர்கள் என்ன மாதிரியான பெண்கள். இதுபோன்ற பெண்களின் கருவறைகள்தான் பாலியல் குற்றவாளிகளை உருவாக்குகிறது” எனக் காட்டமாகப் பேசியுள்ளார். நிர்பயா வழக்கு விசாரணை ஜனவரி 7-ம் தேதி தான் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது குற்றவாளிகள் நான்குபேரையும் ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. நிர்பயாவின் தாய், தந்தை இருவரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். அதேபோல் குற்றவாளிகளின் குடும்பத்தினரும் நீதிமன்றத்துக்கு வருகை புரிந்திருந்தனர்.

நீதிபதி தீர்ப்பு வழங்கியதையடுத்து குற்றவாளி முகேஷ் சிங்கின் தாய் நிர்பயாவின் தாயாரிடம் சென்று சேலையைப் பிடித்தவாறு கெஞ்சினார். `தயவுசெய்து என் மகனை மன்னித்துவிடுங்கள். அவனுடைய வாழ்க்கைக்காக நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்’ எனக் கண்ணீர் வடித்தார். அதற்கு நிர்பயாவின் தாய் `எனக்கும் ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு என்ன ஆனது. நான் எப்படி மன்னிக்க முடியும்’ என்றார்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு `ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை சோனியா மன்னித்ததுபோல நிர்பயாவின் தாயும் குற்றவாளிகளை மன்னித்து அவர்களுக்கு வழங்கப்படவுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்குப் பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியிருந்தார். இவரின் கருத்துக்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் கங்கனா ரனாவத் தன் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

`எனக்கும் ஒரு மகள் இருந்தாள்.. அவளுக்கு என்ன ஆனது?!’- நிர்பயா வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
பின் செல்ல