Published:Updated:

`அன்று பாக். படைத்தளதியைக் கொன்றேன்; இன்று போக்குவரத்தை சரிசெய்கிறேன்!' - கார்கில் வீரரின் நிலை

``டைகர் ஹில் தாக்குதலில் துணிச்சலுடன் போராடியதற்காக `பரம் வீர் சக்ரா’ விருதுக்காக சட்பல் பெயரைப் பரிந்துரை செய்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார் அவரின் படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் பஜ்வா.

பஞ்சாப் மாநிலம், பவானிகார் மாவட்டத்தில் உள்ள சங்ருர் என்ற சிறிய நகரத்தில் தலைமை கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் சட்பல் சிங், பிஸியாக சாலை போக்குவரத்தைச் சீரமைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் சீருடையை உற்றுக் கவனித்தால், அவர் வெறும் காவல்துறை அதிகாரி இல்லை என்பது தெரியும். சட்பல் சிங், தன் உடையில் நான்கு அடுக்குகளைக் கொண்ட பல வண்ணங்களில் விருது ரிப்பன்களை குத்திவைத்துள்ளார். அதில் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம் கலந்த ’வீர் சக்ரா’வும் அடங்கும்.

கார்கில் போர்
கார்கில் போர்

20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கார்கில் போரின்போது டைகர் ஹில் பகுதியில், மேற்கு பாகிஸ்தான் ராணுவப்படையின் கர்னர் ஷேர் கான் மற்றும் இன்னும் மூன்று பேரைக் கொன்றவர் இந்த சட்பல் சிங். ஷேர் கான் இறந்த பிறகு, பாகிஸ்தானில் துணிச்சலுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவரைக் கொன்ற சட்பல் சிங் இன்று இந்தியச் சாலைகளில் நின்று போக்குவரத்தைச் சரிசெய்து வருகிறார்.

டைகர் ஹில் பகுதியில் நடந்த தாக்குதலின்போது அங்கு இருந்த 19 இந்திய ராணுவ வீரர்களில் சட்பல் சிங்கும் ஒருவர். அந்தத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த பல வீரர்கள் வீர மரணமடைந்தனர். சிலர் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருடன் திரும்பினர். அப்படி உயிர் தப்பியவர்களில் சட்பல் சிங்கும் அடங்குவார்.

சட்பல் சிங்
சட்பல் சிங்
Indian Express

கார்கில் போர் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் (Indian Express) ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள சட்பல் சிங், ``ஜூலை 5, 1999-ம் ஆண்டு மாலை நாங்கள் அனைவரும் எங்கள் நிலையை அடைந்தோம். அன்று அளவுக்கு அதிகமான பனி இருந்தது, நாங்கள் அணிந்திருக்கும் உடையைத் தவிர வேறு எங்களைப் பனியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேறு எதுவும் இல்லை. ஜூலை 7-ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் தங்களின் முதல் தாக்குதலைத் தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியப் படையினரைப் பின்னோக்கித் தள்ளிக்கொண்டிருந்தது. பின்னர் நாங்கள் மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தோம். நான் வைத்திருந்த மெஷின் துப்பாக்கியை நான்கு குண்டுகள் துளைத்தன. ட்ராக் சூட் அணிந்த, நல்ல உயரமான ஒரு மனிதர் பாகிஸ்தான் படைகளை வழிநடத்தி வந்தார். அப்போது சுற்றிலும் குழப்பம் ஏற்பட்டது. இரு படைகளும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் நான் பாகிஸ்தான் படையை வழிநடத்துபவரைக் கொல்ல முற்பட்டேன். அப்போது அவர் ஷேர் கான் என எனக்குத் தெரியாது. அவருடன் சேர்த்து நான்கு பேரைச் சுட்டுக்கொன்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சட்பல் சிங்
சட்பல் சிங்
Indian Express

2009-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் தன் சேவை முடிந்து வெளியேறிய சட்பல், அடுத்தபடியாக பஞ்சாப் மாநில காவல்துறையில் இணைந்துள்ளார். ``நான் தவறான முடிவை எடுத்திருக்கலாம். எனது வீர் சக்ராவுக்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. நான் முன்னாள் படைவீரர்களின் ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்தேன். இப்போது ஒரு தலைமை கான்ஸ்டபிளாகப் போக்குவரத்தை சரிசெய்துகொண்டிருக்கிறேன்” என வேதனையுடன் கூறியுள்ளார்.

News Credits: Indian Express

சட்பல் சிங் போன்று, கார்கில் போரில் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய வீரர்களை நாம் மறப்பது சரியா?!

பாகிஸ்தான் ராணுவ வீரர்களும், தீவிரவாதக் குழுக்களும் இணைந்து கார்கிலின் `டைகர் ஹில்ஸ்' முகாமைக் கைப்பற்றினார்கள். இங்கிருந்து ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலைப் பகுதியையும், மற்ற மலைப் பகுதிகளையும் நன்றாகக் கண்காணிக்க முடியும். இப்படிப்பட்ட சூழலில், தரைப்பகுதியில் இருந்து தாக்குவது சவாலான விஷயம். ஆனால், இக்கட்டான சூழலையும் தாண்டி, வான்வழிப் படையின் உதவியோடு தாக்கி முன்னேறி, கார்கிலைக் கைப்பற்றியது இந்தியா.

1999-ல் நடந்த `ஆபரேஷன் விஜய்'... கார்கில் நமக்கு கைவசமானது பற்றிய கம்ப்ளீட் கவர் ஸ்டோரி APPAPPO-வில் வந்திருக்கு.

http://bit.ly/2YiewW8 லிங்க்கை க்ளிக் செய்து உங்கள் APPAPPO ஆப்பை பயன்படுத்தலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு