Published:Updated:

`இன்றைய பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை!' - கர்நாடக அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அமைச்சர் டாக்டர் கே.சுதாகர்
அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் ( Twitter Photo:/ @mla_sudhakar )

திருமணம், குழந்தை என இந்த முடிவுகள் எல்லாம் தனிப்பட்ட பெண்ணின் உரிமை. ஆனால், `பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று நம் நாட்டில் அமைச்சர்களே இன்றும் பேசிக்கொண்டிருப்பது வேதனை என்று விமர்சிக்கிறார்கள் சமூக நலச் செயற்பாட்டாளர்கள்.

`பொண்ணா பொறந்தா ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்' என்ற பாடல் வரி, 46 ஆண்டுகளுக்கு முந்தைய `உரிமைக்குரல்' திரைப்படத்தில் இடம்பெற்றது. ஆனால், இன்றும் அந்தக் கருத்தில் சமூகத்திடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்பதே நிதர்சனம். அதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக அமைந்திருக்கிறது, கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சரின் சமீபத்திய பேச்சு. ``இன்றைய இந்தியப் பெண்கள் திருமணம் செய்யாமல் தனியாக இருக்க விரும்புகின்றனர். குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதெல்லாம் தவறு'' என்று பேசியிருக்கிறார். மேலும், பெண்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் டாக்டர் கே.சுதாகர்
அமைச்சர் டாக்டர் கே.சுதாகர்
Twitter Photo:/ @mla_sudhakar
`நைட்டியும் பூவும் தோல்விக்கான அடையாளமா?' - `டாக்டர்' சர்ச்சைக்கு நெல்சனின் பதில்?

உலக மனநல தினத்தை முன்னிட்டு கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் இந்தியர்களின் பொதுவான மனநலப் பிரச்னைகள் குறித்து உரையாற்றினார். அதில், ``மன அழுத்தத்தைக் கையாள்வது ஒரு கலை. அதனை இந்தியர்கள் கற்க வேண்டிய அவசியம் இல்லை. நாம்தான் மற்ற நாட்டவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனெனில் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி முதலியவற்றை ஆதியிலேயே கண்டுபிடித்து உலகுக்கு அளித்தது நாம்தான்" எனப் பேசியுள்ளார். மேலும், இந்தியாவில் ஏழு பேரில் ஒருவர் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்" என்றார்,

மேலும் பேசியபோது, ``தற்காலத்து இந்தியப் பெண்கள் தனிமையில் இருக்க விரும்புகின்றார்கள், அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள மறுக்கின்றனர், அல்லது வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொள்ள நினைக்கின்றனர். இது நல்லது அல்ல" எனப் பேசியுள்ளார்.

அமைச்சர் டாக்டர் கே.சுதாகர்
அமைச்சர் டாக்டர் கே.சுதாகர்
Twitter Photo:/ @mla_sudhakar

அமைச்சரின் இந்தப் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. திருமணம், குழந்தை என இந்த முடிவுகள் எல்லாம் தனிப்பட்ட பெண்ணின் உரிமை. ஆனால், `பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று நம் நாட்டில் அமைச்சர்களே இன்றும் பேசிக்கொண்டிருப்பது வேதனை என்று விமர்சிக்கிறார்கள் சமூக நலச் செயற்பாட்டாளர்கள். மேலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் திருமணம் ஆன பல பெண்கள் குடும்ப, குழந்தைப் பொறுப்புகளால் வீட்டுக்குள் முடங்கும் நிலை மாற எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பேச வேண்டும். ஆனால், ஓர் அமைச்சரே பெண்களுக்குப் பண்பாடு, கலாசார வகுப்பெடுத்திருப்பது பல தரப்பில் இருந்தும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு