Published:Updated:

`நோ குவாரன்டீன்; இ-பாஸ் வேண்டாம்!' - கட்டுப்பாடுகளை முழுமையாகத் தளர்த்திய கர்நாடகா

எடியூரப்பா
எடியூரப்பா

`கொரோனா அறிகுறிகள் இல்லாத பயணிகள், தங்களது வேலையில் சேர்ந்து பணிபுரியலாம். அவர்களுக்கு இனி 14 நாள்கள் கட்டாயத் தனிமைப்படுத்துதல் (ஹோம் குவாரன்டீன்) தேவையில்லை'.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அம்மாநிலக் கூடுதல் தலைமைச் செயலாளரும், சுகாதாரத்துறைச் செயலாளருமான ஜாவேத் அக்தர் அறிவித்திருக்கிறார்.

இதுவரை மற்ற மாநிலங்களிலிருந்து கர்நாடகா வரும் பயணிகளால் பின்பற்றப்பட்ட கட்டுப்பாடுகளான மாநிலத்துக்குள் நுழையும்போது பயணிகள் பதிவேட்டில் பதிவு செய்வது; எல்லைப் பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை; மாவட்ட அளவில் சோதனைகள்; கைரேகையைப் பதிவு செய்வது; 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்துதல்; பரிசோதனை செய்வது... என அனைத்தும் தற்போது மாநில அரசால் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கர்நாடக அரசு, `மற்ற மாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் மேற்கண்ட கட்டுப்பாடுகளை இனிமேல் பின்பற்ற வேண்டியதில்லை’ என அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி அன்று மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா, மூன்றாம்கட்ட ஊரடங்குத் தளர்வுகள் தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், `மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலத்துக்குள்ளேயும் பொதுமக்கள் மற்றும் தனிநபர் பயணம் செய்ய இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது’ என்று அறிவுறுத்தியிருந்தார். மேலும், `அரசின் இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றாதவர்கள் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி மத்திய அரசு அறிவித்த விதிமுறைகளை மீறுவதாகவே கருதப்படும்’ என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

கர்நாடகா சட்டமன்றம்
கர்நாடகா சட்டமன்றம்

இது விநியோகச் சங்கிலியைப் பாதிப்பதால், பொருளாதாரரீதியான பாதிப்புகளும், வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்னைகளும் ஏற்படுவதாக உள்துறை செயலாளர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்தே, கர்நாடக அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருப்பதாகத் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் கடைசி அறிக்கையின்படி இனி மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. இதன்படி தற்போது நிலவிவரும் சூழலைக் கருத்தில்கொண்டு, கர்நாடகத்துக்கு வெளி மாநிலங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு புதிதாகத் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறிகள் இல்லாத பயணிகள், தங்களது வேலையில் சேர்ந்து பணிபுரியலாம். அவர்களுக்கு இனி 14 நாள்கள் கட்டாயத் தனிமைப்படுத்துதல் (ஹோம் குவாரன்டீன்) தேவையில்லை.

ஊரடங்கு
ஊரடங்கு
Representational Image
கர்நாடகா: `மாதவி மீண்டு வந்தது போல உள்ளது!’ - மனைவிக்குத் தத்ரூபமாக சிலை வைத்த கணவர்

ஆனால், கர்நாடகாவுக்கு வந்த நாள் முதல் 14 நாள்களுக்கு கொரோனா அறிகுறிகள் தங்களுக்கு இருக்கின்றனவா என அவர்களே உடல்நிலையை கண்காணித்துக்கொள்ள வேண்டும். இந்தத் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மாணவர்கள், வர்த்தகரீதியாகப் பயணம் மேற்கொள்பவர்கள், தொழிலாளர்கள், பயணிகள் என அனைவருக்கும் பொருந்தும். அவர்கள் எந்தக் காரணத்துக்காக வந்தாலும் எவ்வளவு காலம் தங்கப் போகிறார்கள் போன்றவற்றைக் கருத்தில்கொள்ளாமல் இது பொருந்தும்'' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு