Published:Updated:

`பாகுபலி செட்; 4 ஏக்கர் மணப்பந்தல்!'- பிரமாண்டமாக நடந்த கர்நாடக அமைச்சர் மகள் திருமணம் #PHOTOS

பாகுபலி செட்
பாகுபலி செட்

``பாகுபலி செட் போல காட்சி தரும் திருமண அரங்கானது 4 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அரங்க அமைப்புக்காக சுமார் 300 பேர் மூன்று மாதங்களாகப் பணிபுரிந்துள்ளனர்"

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் மகள் ரக்‌ஷிதாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் கடந்த மார்ச் 5-ம் தேதி பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. 9 நாள்கள் கொண்டாட்டமாக நடைபெற்ற இந்தத் திருமணத்துக்காக சுமார் 500 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருமணத்துக்காக பாகுபலி செட் போல காட்சி தரும் திருமண அரங்கு, 4 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அரங்க அமைப்புக்காக சுமார் 300 பேர் மூன்று மாதங்களாகப் பணிபுரிந்துள்ளனர்.

நான்கு ஏக்கர் பரப்பளவில் அலங்கரிக்கப்பட்டுள்ள மணப்பந்தலில் ஹம்பியில் அமைந்துள்ள வீரபக்‌ஷர் ஆலய வடிவம் உட்பட பல அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இசைக் கச்சேரி, பல வகையான உணவுகள் என பிரமாண்டமாக நடந்த இந்தத் திருமண விழாவில் மத்திய அமைச்சர்கள், திரை பிரபலங்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு