Published:Updated:

`பணம் கொடுக்கிறேன்; விட்டுத்தர வேண்டும்!'- 5 லட்சத்துக்காகக் கணவனை விற்ற மனைவி

முதலில் இதை ஏற்றுக்கொள்ளாத மனைவி, சிறிதுநேரத்தில் அந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்டு அவரின் ஆஃபரை ஏற்றுக்கொண்டுள்ளார்.

Marriage
Marriage

ராம்கி, ஊர்வசி, குஷ்பூ நடித்த படம் இரட்டை ரோஜா. இந்தப் படத்தில் பணக்காரப் பெண்ணான குஷ்பூவிடம் தனது கணவர் ராம்கியைப் பணத்துக்காக ஆசைப்பட்டு விற்றுவிடுவார் ஊர்வசி. இதுபோன்ற ஒரு சம்பவம் இப்போது நிஜத்திலும் நடந்துள்ளது.

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவர் மனைவியுடன் தங்காமல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் வசித்துவந்துள்ளார். நீண்ட காலமாகவே இருவரும் பழகிவந்த நிலையில் இந்த விஷயம் அந்த நபரின் மனைவிக்குத் தெரியவந்துள்ளது.

Marriage
Marriage

இவர்களைக் கண்காணித்துவந்த மனைவி கணவனைக் கண்டித்து வந்துள்ளார். ஆனால் கணவரோ, தனது வீட்டுக்குச் செல்வதையும் மனைவியுடன் பேசுவதையும் நிறுத்தியுள்ளார் அந்த நபர். இதனால், சமீபத்தில் கணவனைத் தேடிச் சென்ற மனைவி, அங்கு தனது கணவன் வேறொரு பெண்ணுடன் இருப்பதைக் கையும் களவுமாகப் பிடித்ததுடன் தன்னுடன் வந்துவிடுமாறு கணவரைக் கேட்டுள்ளார். அந்த நேரத்தில் பெண்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின்போது, சம்பந்தப்பட்ட நபரின் மனைவிக்குக் கடன் இருப்பதை அறிந்துகொண்ட பெண் அவரிடம் நைசாகப் பேசத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

தோசை மாவில் தூக்க மாத்திரைகள்! - ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த காதல் மனைவி

அதன்படி, ``பணம் கொடுக்கிறேன்... கணவரை விட்டுத்தர வேண்டும்" எனக் கேட்டுள்ளார். முதலில் இதை ஏற்றுக்கொள்ளாத மனைவி, சிறிதுநேரத்தில் அந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்டு அவரின் ஆஃபரை ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி முதலில் தனது கணவனை விட்டுத்தர ரூ.17 லட்சம் கேட்டதாகவும் அவ்வளவு பணம் இல்லை என்றதும், பின்னர் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு ரூ.5 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு கணவனை விற்க மனைவி டீல் பேசியதாகக் கூறப்படுகிறது.

Representational image
Representational image

டீலின்படி நேற்று அந்தப் பெண் ரூ.5 லட்சம் கொடுக்கவே அதை வாங்கிக்கொண்டு கணவரை திரும்ப அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறி தாலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் நடந்த முதல்நாளில் எரிக்கப்பட்ட காதல் மனைவி; சாம்பல்கூட கிடைக்கல!‍- கதறிய சித்தூர் இளைஞர்