Published:Updated:

``எலித் தொல்லை, இனி இல்லை..!" - பூனைகளால் நிம்மதி பெருமூச்சு விடும் கர்நாடக காவல்துறையினர்

பூனை ( கோப்புப் படம் )

கர்நாடக மாநிலம், கௌரிபிதனூர் காவல் நிலையத்தில் எலிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த இரண்டு பூனைகளை போலீஸார் வளர்த்து வருகின்றனர்.

``எலித் தொல்லை, இனி இல்லை..!" - பூனைகளால் நிம்மதி பெருமூச்சு விடும் கர்நாடக காவல்துறையினர்

கர்நாடக மாநிலம், கௌரிபிதனூர் காவல் நிலையத்தில் எலிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த இரண்டு பூனைகளை போலீஸார் வளர்த்து வருகின்றனர்.

Published:Updated:
பூனை ( கோப்புப் படம் )

கர்நாடக மாநிலம், சிக்கபள்ளாப்பூர் மாவட்டம், கௌரிபிதனூர் காவல் நிலையத்தில் எலிகளின் தொல்லையால் அலுத்துப்போன போலீஸார் பூனைகளை வளர்த்து வருகின்றனர். காவல் நிலையத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை எலிகள் கடித்துக் குதறி அழித்து விடுவதால், பூனைகளைக் கொண்டுவர போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி இந்த புது யுக்தியை அவர்கள் கையாண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

போலீஸ்: சித்திரிப்புப் படம்
போலீஸ்: சித்திரிப்புப் படம்

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அந்த காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ``காவல் நிலையத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை எலிகள் கடித்து விட்டன. அதிக அளவில் எலிகள் இருப்பதால், முக்கிய வழக்கு ஆவணங்களை எங்களால் பாதுகாக்க முடியாத நிலை இருந்தது. எலி தொல்லையை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு விட்டோம். எதுவும் பலனளிக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூனை
பூனை
கோப்புப் படம்

இந்த நிலையில்தான், பூனைகளைக் கொண்டு எலிகளை ஒழிக்க முடிவெடுத்தோம். அதன்படி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இரண்டு ஆண் பூனைகளை காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தோம். பூனைகள் வந்ததிலிருந்து எலிகள் தொல்லை சுத்தமாக இல்லை. தற்போது எங்களுடைய பணிகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. இரண்டு பூனைகளும் காவல் நிலையத்தின் உறுப்பினர்களாகவே மாறிவிட்டன" என்று தெரிவித்தார்.