Published:Updated:

``காஷ்மீர் குழந்தைகளும் தேசியவாதிகள்தான்!” - என்.சி.சி முகாமில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

குழந்தைகளைத் தவறாக வழிநடத்துகிறவர்கள்தாம் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் என்றும் ராஜ்நாத் சிங் பேசியிருந்தார்.

டெல்லியிலுள்ள கேரியப்பா பரேட் மைதானத்தில், என்.சி.சி வீரர்களுக்கான குடியரசு தின விழா தொடர்பான முகாம் நடைபெற்று வருகிறது. இதில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்க் வீரர்களிடையே பேசுகையில், ``மதங்களிடையே பாகுபாடு காட்ட மாட்டோம் என நாங்கள் கூறியுள்ளோம். அதைத்தானே நாங்கள் செய்கிறோம்? நம்முடைய அண்டைநாடுகளில் அவர்களுக்கென தனி மதம் இருக்கிறது. மத சார்புடைய நாடாகவே தங்களை அறிவித்துள்ளனர். நாம் இன்னும் மதசார்புடைய நாடாக அறிவிக்கவில்லை” என்றார்.

`நேரம் வந்துவிட்டது!’ - பொது சிவில் சட்டம் குறித்த கேள்விக்கு ராஜ்நாத் சிங் பதில்

தொடர்ந்து பேசிய அவர், ``அமெரிக்காவும்கூட தங்களை மதசார்புடைய நாடாகவே அறிவித்துள்ளது. இந்தியா மதசார்புடைய நாடு அல்ல. ஏனெனில், நம்முடைய முன்னோர்கள் நம் நாட்டு எல்லைக்குள் வாழும் மக்களை மட்டுமல்லாமல் உலகில் வாழும் அனைவரையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதினர். எனவே, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வாழ முடியும்” என்று கூறினார். ``உலகத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான் என்கிற சொல்லாடலே இந்தியாவில் இருந்துதான் உலக நாடுகளுக்குச் சென்றது” என்றும் குறிப்பிட்டார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

முப்படை பாதுகாப்பு தளபதி பிபின் ராவத் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ``காஷ்மீரில், 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிரவாதப்படுத்தப்படுகிறார்கள்” என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங்கும், ``காஷ்மீரில் உள்ள குழந்தைகள் தேசியவாதிகள். அவர்களை வேறு பார்வையில் பார்க்கக் கூடாது. இளைஞர்கள் எப்போதுமே இளைஞர்கள்தான். மக்கள் அவர்களை வழிநடத்தக்கூடாது. ஒரே வேளை வழிநடத்தினால், அது தவறாக அமையக்கூடும்” என்றார்.

மேலும், ``குழந்தைகளை நாம் குற்றம் சாட்டக்கூடாது. யார் அவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்களோ அவர்கள்தாம் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். அவர்கள்தாம் குற்றவாளிகளும்கூட” என்று பேசியுள்ளார்.

``ராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்!" - முப்படைகளின் தலைமைத் தளபதி... யார் இந்த பிபின் ராவத்?
பின் செல்ல