Published:Updated:

கழுதைகள் சுமந்துவந்த தங்கம்; தயாரான 550 தங்கத்தகடுகள்; ஜொலிக்கும் கேதார்நாத் ஆலயம்!

கேதார்நாத் ஆலையம்

550 தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டு கேதார்நாத் கர்ப்ப கிரகம் புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது.

கழுதைகள் சுமந்துவந்த தங்கம்; தயாரான 550 தங்கத்தகடுகள்; ஜொலிக்கும் கேதார்நாத் ஆலயம்!

550 தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டு கேதார்நாத் கர்ப்ப கிரகம் புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது.

Published:Updated:
கேதார்நாத் ஆலையம்
உத்தரகாண்ட் மாநிலத்தின் இமாலய மலைப்பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் ஆலயத்துக்கு வருடம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த யாத்திரை இந்த மாத இறுதியில் முடிவடைய உள்ளது. தற்போது குளிர் அதிகமாக உள்ளதால் கேதார்நாத் ஆலயத்தின் நடை இன்று மூடப்பட்டது. இந்நிலையில் ஆலயத்தின் கர்ப்பகிரகத்தில் தங்க முலாம் பூசிய தகடுகள் பதிக்கும் பணிகள் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றுவந்தது. தற்போது, இதன் பணி நிறைவடைந்து 550 தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டு ஆலயம் புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது.

550 அடுக்குகள் தங்கத்தால் பூசப்பட்ட சுவர்கள்
550 அடுக்குகள் தங்கத்தால் பூசப்பட்ட சுவர்கள்

இது பற்றுக் கூறிய ஸ்ரீ பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டித் தலைவர் அஜேந்திர அஜய், "கடந்த மூன்று நாள்களாக இப்பணி நடந்து வந்தது. 'IIT Roorkee', இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றைச் சேர்ந்த என ஆறு பேர் கொண்ட குழு கேதார்நாத் தாமுக்குச் சென்று கோயிலின் கருவறையை ஆய்வு செய்தது. நிபுணர்களின் அறிக்கைக்குப் பிறகு கேதார்நாத் கோயிலின் கருவறையில் தங்கம் பூசும் பணி தொடங்கப்பட்டது. 18 கோவேறு கழுதைகள் மூலம் 550 தங்கத்தகடுகள் மூன்று நாள்களுக்கு முன்பு கேதார்நாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இரண்டு ASI அதிகாரிகளின் மேற்பார்வையில் 19 கைவினைஞர்கள் தங்க அடுக்குகளைப் பதிக்கும் பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தனர் " என்று கூறினார்.