Published:Updated:

அறிகுறியே இல்லாத 186 பேருக்குத் தொற்று.. 76 இடங்கள் ஹாட்ஸ்பாட்! -டெல்லியைக் கலங்க வைக்கும் கொரோனா

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நேற்று டெல்லியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 26 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று சமூகப் பரவல் என்ற நிலைக்குச் செல்லாமல் இரண்டாவது ஸ்டேஜ்லேயே உள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. கேரளா தவிர ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. தமிழகம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் தலைநகர் டெல்லியிலும் கொரோனா தொற்று அச்சுறுத்தும் வகையில் பரவிக்கொண்டிருக்கிறது. நேற்று டெல்லியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 26 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``அறிகுறியே இல்லாத 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் கவலை அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் நேற்று நான் பேசினேன். அப்போது அந்த நபர் மாநில அரசின் உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டு இருந்த தன்னார்வலர் என்பதை அறிந்துகொண்டேன். உடனே அவர் இருந்த மையத்துக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா சோதனை செய்யும்படி உத்தரவிட்டேன். டெல்லியில் சீரான வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. 76 இடங்கள் ஹாட் ஸ்பாட்டாக கண்டறியப்பட்டுள்ளன. 76 இடங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக இருப்பதால், டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு வாய்ப்பில்லை. ஊரடங்கு தளர்வு பற்றி ஏப்ரல் 27 மீண்டும் ஆலோசனை நடத்தப்படும். எனினும் மக்கள் பீதி அடைய வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு