Published:Updated:

`தீவிரவாதம் இல்லை; காதலுக்காகவே அபுதாபி வந்தேன்!’- மாயமான கேரள மாணவி வாக்குமூலம்

வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட கேரள மாணவி, தன் காதலனைத் தேடி அபுதாபி சென்றதாக அந்நாட்டு ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

Ciyani Benny
Ciyani Benny ( @abhi95choudhary )

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் சியானி பென்னி. இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் தங்கிப் படித்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த மாதம் 18-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற மாணவி மீண்டும் விடுதிக்குத் திரும்பவே இல்லை. இதையறிந்த மாணவியின் நண்பர்கள், அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் டெல்லி விரைந்த சியானின் பெற்றோர், தன் மகள் காணாமல் போனதாகக் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

Kidnapping
Kidnapping

அதன் பின்னர் நடந்த விசாரணையில் மாணவி சியானி, செப்டம்பர் 18-ம் தேதி காலை 11 மணி வரை தன் கல்லூரியில் வகுப்பிலிருந்துவிட்டு அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 2:45 மணிக்கு கோ ஏர் (Go air) விமானம் மூலம் அபுதாபி சென்றுள்ளார் எனத் தெரியவந்தது. இதையடுத்து மாணவியை யாரோ நாடு கடத்திவிட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது. இதற்கிடையில், லவ் ஜிகாத் என்ற பெயரில் யாரோ ஒரு தீவிரவாதி அந்தப் பெண்ணை மூளைச்சலவை செய்து அவரை மதமாற்றம் செய்துவிட்டதாகச் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் ஜார்ஜ் குரியன் குற்றம்சாட்டினார்.

மேலும் இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏ தலையிட வேண்டும் என அவர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதினார். இதனால் இந்த விவகாரம் தேசிய அளவில் பூதாகரமானது. இதையடுத்து மாணவியை மீட்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தும், அத்தனையும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் மாணவி சியானி, இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சகம், கேரள முதல்வர் மற்றும் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் ஜார்ஜ் குரியன் ஆகிய அனைவருக்கும் இ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.

abu dhabi
abu dhabi
Wikipedia

தான் அபுதாபி சென்றதற்கான காரணம் பற்றி அந்நாட்டு ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள சியானி, “ நான் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அபுதாபியில் வசிக்கும் இந்தியர் ஒருவரைக் கடந்த 9 மாதங்களுக்கு முன்னால் சமூகவலைதளத்தில் சந்தித்தேன். நாங்கள் நண்பர்களாகப் பழகி பிறகு காதலிக்கத் தொடங்கினோம். அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்.

``வீட்டை விட்டு வந்து 5 வருஷமாச்சு; பேரப்புள்ளைங்கள பார்க்க ஆசையா இருக்கு!" - 75 வயது லட்சுமி பாட்டி

அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற என் சொந்த விருப்பத்தோடுதான் டெல்லியிலிருந்து அபுதாபிக்கு வந்தேன். மேலும் எனக்குப் பிடித்தே இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளேன். என்னை யாரும் வற்புறுத்தவில்லை. சியானி என்ற என்னுடைய பெயரை ஆயிஷா என மாற்றிக்கொண்டேன். நடந்த அனைத்துச் சம்பவங்களையும் கடந்த மாதம் 24-ம் தேதியே அபுதாபி நீதிமன்றத்தில் வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளேன். என்னைக் கேரளாவுக்கு அழைத்துச்செல்ல என் பெற்றோர் அபுதாபி வந்தனர். நான் என் காதலனுடன் இங்கேயே வாழ விரும்புவதை அவர்களிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டேன்.

Ciyani Benny
Ciyani Benny

நான் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துவிட்டதாகவும் நாடு கடத்தப்பட்டதாகவும் கட்டாயப்படுத்தி மதம் மாறவைத்ததாகவும் பரவும் அனைத்துச் செய்திகளிலும் உண்மையில்லை. என்னைப் பற்றிய இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை அனைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.