Published:Updated:

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள்.. கேரள அரசின் புதிய முயற்சி

கேரளா

10 கிலோ அரிசி, மைதா, மிளகாய்த்தூள், வெங்காயம் போன்றவற்றோடு, பிற அத்தியாவசியப் பொருள்கள் கேரள அரசின் உணவு வழங்கல் துறையின் கீழ் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள்.. கேரள அரசின் புதிய முயற்சி

10 கிலோ அரிசி, மைதா, மிளகாய்த்தூள், வெங்காயம் போன்றவற்றோடு, பிற அத்தியாவசியப் பொருள்கள் கேரள அரசின் உணவு வழங்கல் துறையின் கீழ் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

Published:Updated:
கேரளா

கேரளாவில் இதுவரை ஒன்பது பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கெல்லாம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸோடு பறவைக் காய்ச்சலும் சேர்ந்துகொண்டு கேரள மக்களை அச்சத்தின் விளிம்பில் நிறுத்தியுள்ளது.

‘கொரோனா’ வைரஸ்
‘கொரோனா’ வைரஸ்

கடந்த மாதம் 29-ம் தேதி இத்தாலியிலிருந்து கேரள மாநிலத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்துக்குத் திரும்பிய மூவர் உட்பட ஐந்து பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் இத்தாலியிலிருந்து வந்ததை மறைத்த நிலையில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குக் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இது கேரளாவில் கொரோனா பீதியை மீண்டும் கிளப்பியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ராணி பஜவங்கடி கிராமப் பஞ்சாயத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களோடு தொடர்பில் இருந்த 34 குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களை அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தியது மாவட்ட நிர்வாகம். தொடர்ந்து, அதே மாவட்டத்தில் மேலும் 6 பேருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு கேரளாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

கேரளா முதல்வர் பினராயி விஜயன்
கேரளா முதல்வர் பினராயி விஜயன்
ANI

இந்நிலையில், பத்தனம்திட்டா மாவட்டத்திலிருந்து கொரோனா வைரஸ் மற்ற பகுதிகளுக்குப் பரவாமலிருக்க, மாநில அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது அன்றாடத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்குவதற்கு சந்தைப் பகுதிக்குச் செல்லும்போது, ஒருவேளை இவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் இவர்கள் செல்லும் பகுதிகளிலெல்லாம் வைரஸ் தொற்று பரவும் என்பதால், இவர்களுக்குக் கேரள அரசு சிறப்பு ஏற்பாட்டைச் செய்திருக்கிறது.

அதன்படி, பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தேவையான அன்றாடப் பொருள்களை, கிராமப் பஞ்சாயத்துகளின் உதவியோடு இலவசமாக வழங்கி வருகிறது. 10 கிலோ அரிசி, மைதா, மிளகாய்த்தூள், வெங்காயம் போன்றவற்றோடு, பிற அத்தியாவசியப் பொருள்கள் கேரள அரசின் உணவு வழங்கல் துறையின் கீழ் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

‘கொரோனா’ வைரஸ்
‘கொரோனா’ வைரஸ்

இப்படி இவர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் அளிக்கப்பட்டு வர, இவர்கள் எந்தக் காரணத்துக்காகவும் வெளியில் சென்று கொரோனா தொற்று அவர்களுக்கு இருந்தால், வேறு எங்கும் பரவிடாமல், இவர்களை மாவட்ட நிர்வாகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

மேலும், இவர்களுக்கு இந்தப் பொருள்களை வழங்குவதற்குச் செல்லும் நபர்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு செல்ல வேண்டும் எனப் பஞ்சாயத்து தலைவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமைத்த உணவு வேண்டும் என இந்தக் குடும்பங்கள் வேண்டுகோள் விடுத்தால், அதை வழங்கவும் திட்டமிட்டிருப்பதாக மாவட்ட மருத்துவ அலுவலர் ஷீஜா தெரிவித்துள்ளார்.

கொரோனா
கொரோனா

கொரோனாவால் பாதிப்படைந்த முதல் ஐந்து நபர்கள் அரசு போக்குவரத்து வாகனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள் என அவர்கள் சென்ற அனைத்து இடங்களையும் வரைபடமாக வரைந்து வெளியிட்டு, 'இங்கெல்லாம் புழங்கியவர்கள் அலர்ட்டாக இருங்கள்' என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நோய் பரவல் கட்டுப்பாட்டில் கேரள அரசு முன் உதாரணமாவது இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் என்று பலரும் இதனை வரவேற்றுள்ளனர்!