Published:Updated:

கேரளா: `குவாரன்டீன் மைய மாடிக்குக் கயிறு கட்டி மது சப்ளை!’- அதிகாரிகள் அதிர்ச்சி

மது
மது ( representational image )

துபாயிலிருந்து 3-ம் தேதி கேரளாவுக்கு வந்தவரை, அங்குள்ள குவாரன்டீன் மையத்தில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அவர், தன் நண்பர்களுக்கு போன் செய்து மது பாட்டில் கேட்டு வாங்கிக் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டார். 

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டிவருகின்றன. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் மூலம் நோய்த் தொற்று பரவுவதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 

Representational image
Representational image
representational image

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தின் அடூர் நகரத்துக்கு, துபாயில் பணியாற்றிவிட்டு சொந்த ஊருக்கு கடந்த 3-ம் தேதி வந்தார். விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியதும், அவரைத் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச்சென்று, அங்குள்ள அடுக்குமாடியில் தங்கவைத்தனர்.

மகனுக்காக 10 நாள் கொரோனா வார்டில் தங்கியிருந்த `ஆண் தேவதை’ மாதேஷ்!

துபாயிலிருந்து வந்ததால், அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. குவாரன்டீன் பிரிவில், மாடியொன்றில் தனிமையில் இருந்த அவருக்கு, மது குடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால் தன் நண்பர்களை செல்போனில் அழைத்த அவர், மது வாங்கிக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்.

மது பாட்டில்கள்
மது பாட்டில்கள்

நண்பர்கள் மது பாட்டில்களை வாங்கி வந்து, மேலிருந்து போடப்பட்ட கயிற்றில் கட்டி அனுப்பியுள்ளனர். போதை தலைக்கேறிய அந்த நபர், சத்தம்போட்டுக் கத்தி, பிறருக்குத் தொந்தரவாக இருந்துள்ளார். அத்துடன், போதையில் தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு திறக்க மறுத்து அடம்பிடித்திருக்கிறார்.

கொரோனா: `இறப்பு எண்ணிக்கையைக் குறைக்கவில்லை!’ - ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனை நிறுத்தம்

போதையில் அந்த நபர் செய்யும் அட்டூழியம் பற்றிக் கேள்விப்பட்ட போலீஸார், உள்ளே சென்று அவரிடம் பேசி வெளியே அழைத்து வந்திருக்கிறார்கள். அதன்பின்னர், அவரை பத்தனம்திட்டா மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருடைய பரிசோதனை முடிவு வந்தபோது, அவருக்குக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கொரோனா
கொரோனா

அவருக்கு மது பாட்டில்களை வாங்கிக் கொடுத்த நண்பர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்தது. அதில் கிளிவாயல், கூழக்கடா ஆகிய  கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. மது பாட்டில்கள் கொடுத்த இரு நண்பர்களும் இப்போது குவாரன்டீன் வார்டில் அனுமதிக்கப்பட்டு கொரோனோ சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு