Published:Updated:

`மொபைலுக்குத் தாலிகட்டிய மணமகன்!' - கேரளாவின் முதல் ஆன்லைன் திருமணம்

ஆன்லைன் திருமணம்
ஆன்லைன் திருமணம்

வீடியோ காலில் தெரிந்த அஞ்சனாவுக்கு ஸ்ரீஜித் மொபைலைச் சுற்றி தாலியைக் கட்டுகிறார். அந்த சமயத்தில் அஞ்சனாவும் தன் கழுத்தில் தாலியைக் கட்டிக்கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே முடங்கிப்போயுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளில் 20-க்கும் குறைவானவர்கள்தான் கலந்துகொள்ள வேண்டும். அப்படி கலந்துகொள்பவர்களும் ஒரு மீட்டருக்குமேல் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என்பதுபோன்ற பல விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல திருமணங்களில் மணமக்கள் மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளிவிட்டும் நடைபெற்றன. பல திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அதிலும் லாக்டெளன் காரணமாக மணமகனும், மணமகளும் வேறு வேறு ஊர்களில் சிக்கியுள்ளதாலும் பல திருமணங்கள் நின்றுபோயுள்ளன. இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், லக்னோவில் இருக்கும் பெண்ணுக்கும் வீடியோ கால் வழியாக திருமணம் நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தாலி கட்டும் நிகழ்வு
தாலி கட்டும் நிகழ்வு

கேரள மாநிலம் சங்ஙணாசேரியைச் சேர்ந்த ஸ்ரீஜித்துக்கும், லக்னோவில் பணிபுரியும் பள்ளிப்பாடைச் சேர்ந்த அஞ்சனாவுக்கும் ஏற்கெனவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. லாக்டெளன் காரணமாக லக்னோவிலிருந்து அஞ்சனா ஊருக்கு வர முடியவில்லை. இதைத்தொடர்ந்து குறித்த சமயத்தில் திருமணம் செய்ய முடிவு செய்து அவர்கள் வீடியோ கால் மூலம் திருமணம் செய்ய முடிவுசெய்தனர். அதன்படி அஞ்சனா-வை வீடியோ கால் மூலம் திருமணம் செய்துள்ளார் ஸ்ரீஜித்.

லக்னோவில் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தார் அஞ்சனா. வீடியோ காலில் தெரிந்த அஞ்சனாவுக்கு ஸ்ரீஜித் மொபைலைச் சுற்றி தாலியைக் கட்டுகிறார், அந்த சமயத்தில் அஞ்சனாவும் தன் கழுத்தில் தாலியைக் கட்டிக்கொண்டார். அஞ்சனாவின் உச்சியில் ஸ்ரீஜித் இங்கிருந்தபடி குங்குமம் வைக்க, அஞ்சனா அங்கிருந்து குங்குமம் தரித்துக்கொள்கிறார். இப்படியாக திருமணம் நிறைவடைந்தது. கேரளத்தில் நடந்த முதல் ஆன்லைன் திருமணம் இதுதான்.

ஸ்ரீஜித், அஞ்சனா தம்பதி
ஸ்ரீஜித், அஞ்சனா தம்பதி

இதுகுறித்து ஸ்ரீஜித்தின் உறவினர் ஒருவர் கூறும்போது, "ஸ்ரீஜித் இசாப் வங்கியில் பணிபுரிகிறார். அஞ்சனா உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஐ.டி.கம்பெனியில் வேலைசெய்துவருகிறார். அவருடன் அவரது அம்மா மற்றும் சகோதரன் ஆகியோர் உள்ளனர். அவரது அப்பா ஊரில் உள்ளார். ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டபடி கடந்த 26-ம் தேதி திருமணம் நடந்தது. இதற்காக அவர் கடந்த 18-ம் தேதி ஊருக்கு வருவதற்காக விமான டிக்கெட் போட்டு வைத்திருந்தார். ஆனால் கொரோனா லாக்டெளன் காரணமாக ஊருக்கு வரமுடியவில்லை. எனவே வீடியோ கால் மூலம் திருமணம் செய்துகொண்டனர்.

ஸ்மார்ட் `ஆன்லைன்’ வொர்க்.. தனிமனித இடைவெளி..! -2 ஆண்டுகளுக்கு பிளான் தயாரித்த தென்கொரியா #Corona

இதற்காக அஞ்சனாவின் வீட்டுக்குச் சென்ற ஸ்ரீஜித் அங்கிருந்தபடி திருமணச் சடங்குகளைச் செய்தபிறகு ஆன்லைன் மூலம் திருமணத்தையும் நடத்தியுள்ளார். ஸ்ரீஜித்தின் சகோதரன் சுஜித் துபாயில் இருப்பதால் அவராலும் இந்தத் திருமணத்தில் பங்கெடுக்க முடியவில்லை" என்றார்.

World First online wedding Groom : Kerala Bride : Lucknow

Posted by Isha Shanthi on Tuesday, 28 April 2020
அடுத்த கட்டுரைக்கு