Published:Updated:

கேரளா விபத்து: 45 நிமிடங்களில் 100 ஆம்புன்ஸ்கள்! - மீட்புப் பணியின் திக்... திக் நிமிடங்கள்

கேரளா விமானம்
கேரளா விமானம்

கோழிக்கோடு விமானநிலையத்தில், விமானம் விபத்துக்குள்ளானவுடன் நடந்த மீட்புப் பணிகள் குறித்த செய்தி.

கேரள மாநிலம், கோழிக்கோடு விமான விபத்து பேரதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கொரோனா, பெருமழை என்று அடுத்தடுத்து பிரச்னைகளை சந்தித்து வந்த கேரளாவுக்கு, விமான விபத்தும், இடுக்கி நிலச்சரிவும் கறுப்பு வெள்ளியாக மாறிவிட்டன. விபத்து எப்படி நடந்தது? அதன் பிறகு மீட்புப் பணிகள் எப்படி நடந்தன? என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசியதன் தொகுப்புதான் இந்தச் செய்தி.

கேரளா விமானம்
கேரளா விமானம்
கேரளா: `விமானம் தரையிறங்கும் போது விபத்து!' -  உயிரிழப்பு 14ஆக உயர்வு #NowAtVikatan

கேரளாவில் பல பகுதிகளுக்கு பெருமழைக்கான ரெட் அலர்ட் கடந்த வெள்ளிக்கிழமை விடப்பட்டது. கோழிக்கோடு விமானநிலையம் அமைந்துள்ள, மலப்புரம் மாவட்டம் கரிப்பூரில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து 183 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கரிப்பூருக்கு வந்துவிட்டது.

ஆனால், மோசமான வானிலை காரணமாக, டேபிள் டாப் ரன்வேயில் விமானத்தைத் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இரவு 7.40 மணியளவில் விமானம் சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து மூன்று பகுதிகளாக உடைந்து, விமானநிலைய மதில் சுவரை இடித்துத் தள்ளி நொறுங்கிவிட்டது. அடுத்த சில நிமிடங்களில் அலறல், அழுகை சத்தங்களுடன் அந்த இடமே ரணமானது. கனமழையிலும், அதிக சத்தம் கேட்டவுடன், ஊர் மக்கள் ஒன்று கூடிவிட்டனர்.

கேரளா விமானம்
கேரளா விமானம்

இந்த விபத்துக்கு முன்புவரை, கிட்டத்தட்ட 200 கொரோனா நோயாளிகளுடன் அந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் விமானநிலைய கேட்டைத் திறந்து விபத்தில் சிக்கியவர்களை, அந்தப் பகுதி மக்கள் மீட்கத் தொடங்கினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Air Crash: `மழையையும் கொரோனா அச்சத்தையும் மீறிய மனிதநேயம்!’ - நெகிழவைத்த கேரளம்

விஷயத்தை கேள்விப்பட்டு, மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்பாவே, உள்ளூர்வாசிகள் 30-க்கும் மேற்பட்டோரை மீட்டுவிட்டனர். அடுத்த 45 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்கு 100 ஆம்புலன்ஸ்கள் வந்துவிட்டன. விமானிகள், பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து கிடந்த நிலையில், கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் கடந்து மீட்புப் பணிகளில் துரிதம் காட்டப்பட்டது. மறுபக்கம், விமானத்தின் எரிபொருள் லீக்கேஜ் ஆகிக்கொண்டிருந்தது.

மீட்புப் பணி
மீட்புப் பணி

அது, விமானம் எப்போது வேண்டுமானால் வெடிக்கும் என்பதற்கான அபாய அறிகுறி. இதனால், முழுவேகத்தில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. தொடர்மழை, மீட்புப் பணிகளை சிரமமாக்கினாலும், எரிபொருள் லீக்கேஜால் விமானம் வெடிக்கும் அபாயத்தைக் குறைத்தது.

மீட்கப்பட்டவர்கள் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள 19 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 2 மணி நேரத்தில் அங்கு மீட்புப் பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டன. விமானத்தின் முன்பகுதியில் இருந்தவர்களுக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டுவிட்டது. அதிர்ஷ்டவசமாக நடுப்பகுதி மற்றும் பின்பகுதியில் இருந்தவர்கள் காயங்களுடன் தப்பிவிட்டனர்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

எரிபொருள் வெடிக்காமல் இருந்ததும், மீட்புப் பணி விரைவாக நடந்ததும், உயிரிழப்பைக் கட்டுப்படுத்தியதில் பெரும் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைத்துப் பிரிவு மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களைத் தனித்தனியாக வாசித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களைப் பாராட்டியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு