Published:Updated:

பெண் நிருபருக்கு ஆபாச மெசேஜ்; ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்த கேரள போலீஸ்!

`நிருபர்கள், கருத்துக் கேட்க அதிகாரிகளை தொடர்புகொள்வது இயல்பானது. அதற்கு பதிலளிப்பதும், பதில் அளிக்காமல் இருப்பதும் அதிகாரியின் விருப்பம். ஆனால் பிரசாந்த் ஐ.ஏ.எஸ் ஆபாச மெசேஜ் அனுப்பியது குற்றம்' என்ற விமர்சனங்கள் கிளம்பின.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலத்தில் கடந்த சி.பி.எம் ஆட்சியில் முதல்வர் பினராயி விஜயனின் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் மேழ்சிகுட்டி அம்மா. இவர் அமைச்சராக இருந்த சமயத்தில் கேரள கடல் பகுதியில் மீன் பிடிக்க வெளிநாட்டு கார்பரேட் கப்பல் கம்பெனிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அன்றைய காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா, இந்த விவகாரத்தை கையில் எடுத்து அரசை கடுமையாக விமர்சித்தார். இது கேரள மாநில மீனவர்களை பாதிக்கும் செயல் என்றும், தொழிலாளர்களின் நலன் காப்பதாக கூறும் சி.பி.எம் ஆட்சியில் கேரள கடல் பகுதிகள் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கப் படுகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

அந்த சமயத்தில் கேரள மாநில கப்பல் மற்றும் உள்நாட்டு வழிசெலுத்தல் கழக (Kerala Shipping and Inland Navigation Corporation) நிர்வாக இயக்குநராக இருந்த பிரசாந்த் ஐ.ஏ.எஸ், அரசிடம் கருத்துக் கேட்காமல் அனுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து ஊடகங்களில் பலவிதமான செய்திகள் வெளியாயின.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்
` எடா, எடி என அழைக்க பொதுமக்கள் குற்றவாளிகள் அல்லர்!' - காவல்துறையை கண்டித்த கேரள உயர்நீதிமன்றம்

இதையடுத்து எர்ணாகுளத்தைச் சேர்ந்த மாத்ருபூமி பத்திரிகையின் பெண் நிருபர் ஒருவர், இதுகுறித்து கருத்து அறிவதற்காக பிரசாந்த் ஐ.ஏ.எஸ்-க்கு கடந்த ஏப்ரல் மாதம் போன் செய்துள்ளார்.

பலமுறை தொடர்புகொண்டும் போனை எடுக்காத பிரசாந்த் ஐ.ஏ.எஸ்-க்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி கருத்துக் கேட்டுள்ளார் அந்தப் பெண் நிருபர். அவரது வாட்ஸ்அப் மெசேஜுக்கு பதில் அளிக்காத ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரசாந்த், மாறாக ஆபாச மெசேஜ் மற்றும் ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். அவற்றைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் நிருபர், இதுகுறித்து தனது அலுவலகத்துக்கும், எர்ணாகுளம் பத்திரிகையாளர் சங்கத்திற்கும் தகவல் அளித்தார். இதுகுறித்து பத்திரிகையாளர் சங்கம் சார்பில் முதல்வர் பினராயி விஜயனுக்குப் புகார் அனுப்பப்பட்டது.

பெண் நிருபருக்கு அனுப்பப்பட்ட மெசேஜ் குறித்த ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அந்தப் புகாரின் உண்மைத் தன்மை குறித்து காவல் துறை விசாரணையை தொடங்கியது. நிருபர்கள், கருத்துக் கேட்க அதிகாரிகளை தொடர்புகொள்வது இயல்பானது. அதற்கு பதிலளிப்பதும், பதில் அளிக்காமல் இருப்பதும் அதிகாரியின் விருப்பம். ஆனால் பிரசாந்த் ஐ.ஏ.எஸ் ஆபாச மெசேஜ் அனுப்பியது குற்றம் என்ற விமர்சனங்கள் கிளம்பின.

அந்தப் பெண் நிருபர் மீண்டும் மீண்டும் போன் செய்ததாகவும், அப்போது பிரசாந்த் ஐ.ஏ.எஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகவும், அவரின் மனைவி அந்த ஸ்டிக்கர் மெசேஜை அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

பிரசாந்த் ஐ.ஏ.எஸ்
பிரசாந்த் ஐ.ஏ.எஸ்

மேலும் இதுகுறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரசாந்தின் மனைவி லட்சுமி ஃபேஸ்புக்கில், ``பெண் நிருபருக்கு மெசேஜ் அனுப்பியது என் கணவர் அல்லர், நான்தான் அனுப்பினேன். பர்சனல் வாட்ஸ்அப்பில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியையும், அவரது வீட்டில் இருப்பவர்களையும் தொடர்புகொள்வதும். அவர்களுக்கு ஏற்ற வகையில் பதிலளிக்கவில்லை என்றால் அவமானப்படுத்தும் விதமாகச் செய்தி கொடுப்பதும் கண்டிக்கத்தகக்து" என ஆவேசமாகப் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்த விசாரணையின்போது பதிலளித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரசாந்த், ``சில பத்திகையாளர்கள் துப்புரவுத் தொழிலாளர்களை விட தரம் தாழ்ந்தவர்கள்'' எனக் கூறியிருந்தார். இது அந்த சமயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நிபா வைரஸ்: `தரையில் கிடக்கும் ரம்புட்டான் பழங்களைச் சாப்பிட வேண்டாம்!' - கேரள அரசு அறிவுறுத்தல்

இந்த நிலையில் பெண் செய்தியாளரின் புகார் குறித்த முதற்கட்ட விசாரணையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரசாந்த் குற்றம் செய்திருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறி எர்ணாகுளம் சென்ட்ரல் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரசாந்த் பெண்மையைக் கொச்சைப்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பல மாதங்களாக நடந்த விசாரணையின் முடிவில், ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது தற்போது வழக்குப்பதிவு செய்திருப்பதை கேரள பத்திரிகையாளர்கள் வரவேற்றுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு