Published:Updated:

தொழிலாளர்கள் ரயில் கட்டணம் - காங்கிரஸ் கொடுத்த ரூ.40 லட்சத்தை வாங்க மறுத்த ஆட்சியர்கள்!

காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம்
காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம்

கொரோனா பாதிப்பையடுத்து, நாடு முழுவதும் லாக்டௌன் அறிவிக்கப்பட்டதால், புலம் பெயர் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தத் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் புலம் பெயர் தொழிலாளர்களுக்காகக் காங்கிரஸ் கட்சி அளித்த ரயில் கட்டணம் ரூ.40 லட்சம் நிதியை வாங்க மாவட்ட ஆட்சியர்கள் மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பையடுத்து, நாடு முழுவதும் லாக்டௌன் அறிவிக்கப்பட்டதால், புலம் பெயர் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தத் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான, ரயில் கட்டணத்தைப் புலம்பெயர் தொழிலாளர்களே செலுத்த வேண்டும்.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

மாநில அரசுகள் தொழிலாளர்களிடத்தில் டிக்கெட் கட்டணத்தைப் பெற்று, ரயில்வே துறையிடம் செலுத்த வேண்டுமென்று உத்தரவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, `புலம் பெயர் தொழிலாளர்களுக்கான டிக்கெட் கட்டணத்தை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் 'என்று அறிவித்தது. இதற்கிடையே, 'புலம் பெயர் தொழிலாளர்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் 15 சதவிகிதத்தை மாநில அரசுகளிடத்தில் வசூலிக்கப்பட்டதாக ரயில்வே சார்பில் சொல்லப்பட்டது.

இந்தநிலையில், கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, எர்ணாகுளம், கண்ணுர், ஆலுப்புழா மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணமாக ரூ.40 லட்சம் திரட்டப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்க முடிவெடுக்கப்பட்டது. இந்தத் தொகையை நான்கு மாவட்ட ஆட்சியர்களிடத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வழங்கிய போது, அதைப்பெற அவர்கள் மறுத்துவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் தொகையைப் பெற மறுத்ததையடுத்து, ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷானிமோல் உஸ்மான் எம்.எல்.ஏ தலைமையில் காங்கிஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்
ரயில்

கேரள மாநில அரசு புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்னையை முன்வைத்து, அரசியல் செய்வதாக ஷானிமோல் உஸ்மான் குற்றம் சாட்டியுள்ளார். `புலம் பெயர் தொழிலார்கள் விவகாரத்தை மத்திய அரசு கையாண்டு வருகிறது. இந்தச் சூழலில் அரசியல் கட்சிகள் கொடுக்கும் நிதியை ஏற்க முடியாது' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி ஆட்சி, ரஜினி - கமல் அரசியல்... ஆந்திராவிலிருந்து ரோஜா ஸ்பெஷல் பேட்டி!

கேரளாவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல 58 ரயில்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான தொழிலாளர்கள் ரூ.745 வரை ரயில் கட்டணமாகக் கொடுத்து தங்கள் சொந்த ஊருக்குப் பயணப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு