Published:Updated:

கேரளா: தெருநாய் கடித்து இறந்த 12 வயது சிறுமி... தடுப்பூசி போட்டும் தொடரும் மரணம்!

தெருநாய்

கேரள மாநிலத்தில் 12 வயது சிறுமி தெருநாய் கடித்ததால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளா: தெருநாய் கடித்து இறந்த 12 வயது சிறுமி... தடுப்பூசி போட்டும் தொடரும் மரணம்!

கேரள மாநிலத்தில் 12 வயது சிறுமி தெருநாய் கடித்ததால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தெருநாய்

கேரள மாநிலம், கோட்டயம் பகுதியைச் சேர்ந்த அபிராமி (12), என்ற சிறுமியை கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி பால் வாங்கச் சென்றபோது நாய் கடித்திருக்கிறது. ஏழு இடங்களில் நாய் கடித்ததால், பத்தனம்திட்டா பொது மருத்துவமனையில் வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெருநாடு குடும்ப சுகாதார மையத்திலிருந்து அவருக்கு அடுத்த இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டது, நான்காவது டோஸ் செப்டம்பர் 10 அன்று செலுத்தப்படவிருந்தது.

நாய்
நாய்

இருப்பினும், அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது. அவருக்கு ரேபிஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய, புனே மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள வைராலஜி ஆய்வகங்களுக்கும் மாதிரிகள் அனுப்பப்பட்டன. இந்த நிலையில், சிறுமி அபிராமி பரிதாபமாக உயிரிழந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அபிராமியின் மரணம் தொடர்பாக அவருடைய பெற்றோர், ``பெருநாடு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவள் மயங்கிக் கிடந்தபோதெல்லாம் தடுப்பூசியின் விளைவால் சிறுமி மயங்கிக்கிடக்கிறாள் என்று மருத்துவமனை ஊழியர்கள் எங்களை நம்பவைக்க முயன்றனர். இந்த நோய்க்கு குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை என்றும் அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்" எனக் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

தெருநாய்
தெருநாய்
கூகுள்

கேரளாவில், கடந்த சில வாரங்களில் மட்டும் ஐந்து பேர் நாய் கடித்ததாக மருத்துவமனைக்குச் சென்று, தடுப்பூசி போட்ட பிறகு உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்ட ரேபிஸ் தடுப்பு தடுப்பூசியின் தரம் குறித்த கவலையை அதிகப்படுத்தியிருக்கிறது எனவும், மாவட்டத்தில் தெருநாய்களின் தாக்குதல் அதிகரித்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.