Published:Updated:

`அன்புள்ள திருடனின் கவனத்துக்கு..!’ - வைரலான கேரள ஆசிரியர்களின் உருக்கமான வேண்டுகோள்

திருடன்
திருடன் ( மாதிரி புகைப்படம் )

திருடன் ஒருவனுக்குக் கேரள ஆசிரியர்கள் இணைந்து எழுதிய கடிதம் கடந்த இரண்டு நாள்களாக சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது, தலைமை ஆசிரியரின் அலுவலகப் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடன் அங்கிருந்த 40,000 ரூபாய் பணம் மற்றும் 30,000 ரூபாய் மதிப்புள்ள கேமரா போன்ற பல பொருள்களைத் திருடிச் சென்றுள்ளான்.

கேரளப் பள்ளி
கேரளப் பள்ளி

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருடன் பள்ளிக்குள் நுழைந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர் போலீஸார். அப்போதும் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் அதே பள்ளியில் அதே தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் மீண்டும் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்தமுறை திருடன், மடிக்கணினி, பென் ட்ரைவ், ஹார்டு டிஸ்க் போன்ற பல எலெக்ட்ரானிக் பொருள்களைத் திருடிச் சென்றுள்ளான். இந்த முறையும் காவல்நிலையத்தில் புகார் அளித்த ஆசிரியர்கள் நூதனமான முறையில் திருடனுக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளனர். `ஒரு கடிதம் எழுதி அதை சமூகவலைதளங்களில் பரப்பினால் எப்படியும் அது திருடனை எட்டிவிடும்' என்ற நம்பிக்கையில் இப்படிச் செய்துள்ளனர்.

கடிதம்
கடிதம்

அந்தக் கடிதத்தில், ``அன்புள்ள திருடனுக்கு, நீ யார் என்று எங்களுக்குத் தெரியாது ஆனால், ஏழு மாதங்களுக்கு முன்பு நீதான் எங்கள் பள்ளியில் திருடினாய் என்பது மட்டும் நன்றாகத் தெரியும். முன்பு பல ஆயிரம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்களைத் திருடினாய், உன்னைக் காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், இந்த முறை பென் ட்ரைவ், கேமரா, ஹார்டு டிஸ்க் போன்றவற்றைத் திருடியுள்ளாய்.

`அவனே வளர்த்த மாதிரி விக்கறதுக்கு வந்தான்!’ -தூத்துக்குடி விவசாயியைப் பதறவைத்த ஆடு திருடன்

நீ எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள். ஆனால், உன்னிடம் உள்ள அந்த பென் ட்ரைவை மட்டும் திருப்பிக் கொடுத்துவிடு. அதில்தான் எங்களின் வருகைப் பதிவேடு விவரங்கள் உள்ளன. அது இருந்தால்தான் எங்களுக்கு இந்த மாதச் சம்பளம் வரும்.

பென் ட்ரைவ்
பென் ட்ரைவ்
மாதிரி புகைப்படம்

எங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தை வைத்துத்தான் வீட்டுச் செலவு, பெரியவர்களின் மருந்துச் செலவு, வாடகை, லோன் போன்றவற்றைக் கட்ட வேண்டும். அதனால், அந்த ஒன்றை மட்டும் தந்துவிடு. இனிமேல் பள்ளியில் திருடாதே” என்று உருக்கமாக ஆசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்தக் கடிதம் சமூகவலைதளங்களில் வரவேற்பைப்பெற்றுள்ளது.

பின் செல்ல