Published:Updated:

சுற்றுலா தடையால் ரூ.35,000 கோடி வருமானம் இழப்பு - வாழ்விழந்த மக்கள், தள்ளாடும் கேரள பொருளாதாரம்!

கேரளாவுக்கு வருகை தரும் சுற்றுலா வாசிகளின் எண்ணிக்கை பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2020-ம் ஆண்டு உள்நாட்டு சுற்றுலாவாசிகளின் வருகை 72.86 சதவிகிதமும், வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் வருகை 71.36 சதவிகிதமும் குறைந்துள்ளதாக கேரள அரசு சொல்கிறது.

கேரள அரசுக்கான பொருளாதார கட்டமைப்பின் அடிப்படை சுற்றுலாத்துறை. கேரள அரசுக்கு சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே அந்த மாநிலத்தின் ஜிடிபியில் 11.5 சதவிகிதம். கேரளாவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக சுற்றுலாத்துறையை நம்பி தங்கள் வாழ்க்கையை கட்டமைத்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகால கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நொடிந்து போயிருக்கிறது கேரளா சுற்றுலாத்துறை. அதனால் இதை நம்பி வாழ்ந்து வந்த மக்கள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறார்கள்.

மூணார், வயநாடு என சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் இடங்களில் வசித்துவந்த பலரும் இப்போது கட்டட வேலை செய்வது, மீன் பிடிப்பது, சாலையில் காய்கறிகள் விற்பது, மாஸ்க் விற்பது என தங்கள் தொழிலையே முற்றிலும் மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வட்டவடா (மூணார்), கேரளா
வட்டவடா (மூணார்), கேரளா
Picasa

“படகு வீட்டில் என்னோடு பணியாற்றி வந்த பலரும் இப்போது மீன் பிடிக்கும் வேலைக்கோ அல்லது வேறு ஏதாவது கூலி வேலைக்கோ செல்கிறார்கள்” என்கிறார் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த வேலையும் இல்லாமல் சுற்றுலா டாக்ஸி ஓட்டுநர் ஒருவர்.

2019-ம் ஆண்டில் கேரள அரசுக்கு சுற்றுலாத் துறை மூலம் மட்டும் வந்த வருமானம் 45,010 கோடி ரூபாய். ஆனால் 2020-ம் ஆண்டில் 11,000 கோடி ரூபாய் அளவுக்கே வருமானம் கிடைத்துள்ளது. இதுவும் கொரோனாவுக்கு முன்பான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதமும், முதல் அலை ஓய்ந்த பிறகான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இரண்டு மாத வருமானம் மட்டுமே.

கேரளாவுக்கு வருகை தரும் சுற்றுலா வாசிகளின் எண்ணிக்கை பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2020-ம் ஆண்டு உள்நாட்டு சுற்றுலாவாசிகளின் வருகை 72.86 சதவிகிதமும், வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் வருகை 71.36 சதவிகிதமும் குறைந்துள்ளதாக கேரள அரசு சொல்கிறது.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களை கணக்கிட்டால், கடந்த ஆண்டை விட உள்நாட்டு பயணிகளின் வருகை 40.53 சதவிகிதமாகவும், வெளிநாட்டு பயணிகளின் வருகை 95.65 சதவிகிதமாகவும் குறைந்துள்ளதாம்.

கேரளா படகு வீடு
கேரளா படகு வீடு

“ஹோட்டல், ரிசார்ட் எனப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. கொரோனாவுக்கு முன்பிருந்த விலையை விட பாதி விலைக்கு விற்க கூட தயாராக இருக்கிறார்கள். லீஸில் சொத்துக்களை வாங்கியவர்கள் அதை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். உரிமையாளர்கள் நடத்தமுடியாமல் திணறுகிறார்கள். பல விடுதிகள் தற்போது செயல்பாட்டில் இல்லை என்றாலும், சில உரிமையாளர்கள் மட்டும் இருக்கும் பணியாளர்களை வைத்துக்கொண்டு பராமரித்து வருகிறார்கள்” என்கிறார்கள் கேரள சுற்றுலாத் துறையினர்.

“முதல் அலை ஓய்ந்த பிறகு டிசம்பர் – ஜனவரி மாதங்களில் கொஞ்சம் வியாபாரம் ஓடியது. முதல் அலையின் போது படகு வீட்டை ஓட்டாமல் அப்படியே நிறுத்தி வைத்திருந்ததால் அதை சீரமைக்க பலரும் ஐந்து முதல் எட்டு லட்சம் வரை செலவழித்துள்ளார்கள். ஆனால், அதன்பிறகு இரண்டாம் அலை வந்து, இப்போது மூன்றாம் அலையும் வரப்போவதாக சொல்கிறார்கள். இதனால் புதிதாக எந்த முதலீடு செய்யவும் தயக்கமாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கமென்ட்ஸ் - எல்லை மீறிய நெட்டிசன்ஸ், நொந்துபோன இயக்குநர்!

சரி, இதையும் மீறி தொடங்குவோம் என்றால் எரிபொருள் விலை உயர்வால் அதுவும் சாத்தியமில்லை. இந்த நேரத்தில் எங்களால் படகின் வாடகையையும் அதிகரிக்க முடியாது” என்கிறார் கேரள படகுவீடு உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதியான டாமி.

ஆலப்புழா கழிமுகப் பகுதிகளில் மட்டும் ஆயிராத்திற்கும் மேற்பட்ட படகு வீடுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 3 முதல் 5 நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிவந்தன. “இப்போதைய சூழ்நிலையில், பணியாளர்கள் மட்டுமல்ல முதலீட்டாளர்கள் கூட மீன் மற்றும் காய்கறிகளை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று விற்பனை செய்யும் வேறு தொழில்களில் மும்முரம் காட்டுகிறார்கள்” என்கிறார் டாமி.

கேரளா படகு வீடு
கேரளா படகு வீடு

நிலைமையை சமாளிக்க சுற்றுலாத்துறையில் உள்ள 20,000க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது மாநில சுகாதாரத்துறை. கொரோனா பரவல் கேரளாவில் தொடர்ந்து அதிகரித்தாலும், ஹோட்டல்களும் விடுதிகளும் பயோ பபுளில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் வெளியே வர தயங்குகிறார்கள்.

ஓணம் பண்டிகைக்கான கொண்டாட்டங்களும் கேரளாவில் பெரிய அளவில் இல்லை. இதனால், டூரிஸத்தையே நம்பி வாழ்ந்து வந்தவர்கள் வாழ்விழந்து தவிப்பது எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு