Published:Updated:

Air Crash: `மழையையும் கொரோனா அச்சத்தையும் மீறிய மனிதநேயம்!’ - நெகிழவைத்த கேரளம்

கோழிக்கோட்டில் நேற்று இரவு நடந்த விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக, கொரோனா அச்சத்தையும் மீறி பலர் தானாக ரத்த தானம் செய்ய முன்வந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரளாவில் 2018-ம் ஆண்டு மாபெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வர கேரள மக்கள் கடுமையாகப் போராடினார்கள். அந்தப் பெரும் பேரிடர் காலத்திலும் அம்மாநில மக்கள், ஒருவருக்கொருவர் உதவி செய்தும் முகம் தெரியாதவர்களுக்கும் ஆதரவு தெரிவித்து தங்கள் மனித நேயத்தை வெளிப்படுத்தினர். அப்போது நடந்த இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றது. தற்போது அதே போன்ற ஒரு மனித நேய நிகழ்வு மீண்டும் அதே கேரளத்தில் நடந்துள்ளது.

கேரளா
கேரளா

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், துபாயிலிருந்து வந்த ஏர் எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் போனதால் பள்ளத்தில் விழுந்து இரண்டு துண்டாகி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 180-க்கும் அதிகமானவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள பலரும் காயமடைந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்க உள்ளூர் வாசிகள் செய்த உதவி நெகிழவைத்துள்ளது.

கேரளா: `பழுதான லேண்டிங் கியர்; இரண்டாகப் பிளந்த விமானம்!' - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

விமானம் விபத்துக்குள்ளானது அறிந்தவுடனேயே பல உள்ளூர் மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்த விமானியின் உடலையும் மக்கள்தாம் மீட்டுள்ளனர். இதற்கிடையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ரத்தம் தேவைப்படுகிறது விருப்பமுள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம் என அரசும் ஊடகங்களும் தொடர்ந்து மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

கேரளா
கேரளா

இதையறிந்த பொதுமக்கள் நேற்று இரவு முதல் இன்று வரை, நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்ய முன்வந்துள்ளனர். சில தன்னார்வ அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் விபத்து நடந்த அடுத்த சில மணி நேரங்களில் மிகவும் அரிதான ரத்தத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். கொட்டும் மழை மற்றும் கொரோனா அச்சத்தையும் பொருள்படுத்தாமல் மருத்துவமனைக்கு வந்து பலர் ரத்த தானம் செய்துள்ளனர். மருத்துவமனையில் ரத்ததானம் செய்வதற்காக மக்கள் வரிசையில் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நெகிழ வைக்கிறது.

AirCrash: `பதறிய குழந்தைகள்; ரத்தம் படிந்த துணிகள்!’ - நேரில் பார்த்தவர்கள் விவரித்த துயரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு