Published:Updated:

`எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை!’ - வைரலான வீடியோ குறித்து பேட்டியளித்த கேரளப் பெண்

women
women

கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து, எனது வண்டிக்கு முன்னால் வந்து நின்றது. அந்தப் பேருந்து வேகத்துடன் என்னை நெருங்கி வந்ததைக்கண்டு பயந்து, அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்.

பெண் ஒருவர் தனது ஸ்கூட்டரில், சாலையில் இடதுபுறம் வந்துகொண்டிருக்கிறார். அப்போது, அவருக்கு எதிர்புறமாக வந்துகொண்டிருந்த பேருந்து, விதிமீறி அந்தப் பெண் வரும்பாதையிலே வருகிறது. விதிமுறைகளை மீறி பேருந்து வருவதைக் கவனித்த அந்தப் பெண், எந்த சமரசமும் இல்லாமல், தான் செல்லும் பாதையில் நின்றுகொண்டிருக்கிறார். வேறுவழியில்லாமல் அந்த ஓட்டுநர், தன் பேருந்தை செல்லவேண்டிய பாதைக்குத் திருப்புகிறார் -

viral video
viral video

இவ்வளவுதான் அந்த மொத்த வீடியோவும். சொல்லப்போனால் மொத்தம் 24 செகண்ட் மட்டும் ஓடும் அந்த வீடியோ `செம’ வைரலானது. கேரளாவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்துப் பலரும், ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூகவலைதளங்களில் வீடியோவை ஷேர் செய்து, கருத்துகளைப் பதிவிட்டனர்.

`இந்தப் பெண்ணைப் பாருங்கள். தவறான பாதையில் வந்த டிரைவர் கடந்து செல்ல ஓர் அங்குல இடம்கூட கொடுக்கவில்லை’ என்று நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பெண் யார் என்பன உள்ளிட்ட மேற்கண்ட விவரங்கள் எதுவும் தெரியாமலே இருந்தது. இந்த நிலையில், அந்தப் பெண்ணின் பெயர் சூர்யா மணிஷ் என்பது தெரியவந்துள்ளது. அவர் `தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அந்தப் பேருந்து ஓட்டுநரை திட்டித்தீர்த்தனர். ஆனால், சூர்யா, ``பேருந்து ஓட்டுநரின் அந்த `ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட்’ தான் என்னைக்காப்பாற்றியது" என்கிறார்

அதில், ``ஒட்டுமொத்த நிகழ்வின் கடைசி பகுதி மட்டும்தான் அந்த வீடியோவில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. நான் அந்தப் பேருந்து ஓட்டுநரை எதிர்த்து சவால்விடும் வகையில் நிற்கவில்லை. உண்மையில் அப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் உறைந்துபோய் அப்படியே நின்றுவிட்டேன். ஒரு குறுகிய தெருவில் பள்ளிப்பேருந்து ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மேற்கொண்டு அங்கிருந்து முன்னேறிச்செல்வதற்குப் போதுமான வழியில்லை. அதனால் நான் அங்கேயே வண்டியை நிறுத்திவிட்டேன். மேலும், பள்ளிக்குழந்தைகள், பேருந்திலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்தனர்; ஏராளமான வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. நான் நடுத்தெருவில் நின்றுகொண்டிருப்பதைப்போல் உணர்ந்தேன். சிறிது நேரம் கழித்து, பள்ளிப்பேருந்து ஒன்று இடதுபுறம் நகர்ந்து சென்றது. தொடர்ந்து நானும் முன்னோக்கிச் சென்றேன்.

twitter comments
twitter comments

அப்போது, தனியார் வாகனத்தை முந்திக்கொண்டு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து, எனது வண்டிக்கு முன்னால் வந்து நின்றது. அந்தப் பேருந்து வேகத்துடன் என்னை நெருங்கி வந்ததைக்கண்டு பயந்து, உறைந்துவிட்டேன். என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றுவிட்டேன்” என்கிறார் சூர்யா.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அந்தப் பேருந்து ஓட்டுநரை திட்டித்தீர்த்தனர். ஆனால், சூர்யா, ``பேருந்து ஓட்டுநரின் அந்த `ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட்’ தான் என்னைக் காப்பாற்றியது. வந்த வேகத்தைக் குறைத்து அவர், சரியான பாதை வழியே வண்டியை திருப்பிய பின்தான், என்னுடைய பயம் குறைந்தது. இந்தச் சாலையில் 7 ஆண்டுகளாகப் பயணித்து வருகிறேன். ஆனால், இப்படி நடப்பது இதுதான் முதல்முறை” என்றார்.

இதுதொடர்பாக அந்தப் பேருந்து ஓட்டுநர் கூறுகையில், ``இந்த நிகழ்வு புதன்கிழமை, பெரம்பாவூர் பஸ் டிப்போவுக்கு செல்வதற்கு முன் நடந்தது. அப்போது, அந்தப் பகுதியில் பேருந்து ஒன்றிலிருந்து, குழந்தைகள் இறங்கிக்கொண்டிருந்ததால், நான் காலியாக இருந்த வலதுபுறத்தில் பேருந்தை இயக்கினேன். அப்போதுதான், பெண் ஒருவர் சாலையில் ஸ்கூட்டர் ஒன்றில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன்.

bus driver
bus driver

அவர் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை நகர்த்தாமல் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் மீண்டும் இடதுபுறம் வண்டியை திருப்பிவிட்டேன். இந்த வீடியோவை அந்தப் பெண்ணின் நண்பர்கள் எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். சமூகவலைதளத்தில் வைரலாகிவிட்டது” என்றார்.

நியூஸ் கிரேடிட் : http://www.newindianexpress.com/states/kerala/2019/sep/28/fear-made-woman-on-scooter-stand-still-before-bus-2040109.html

அடுத்த கட்டுரைக்கு