உறவுகள் கைவிரித்த நிலையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த சிறுவனுக்குத் தாயுள்ளம் கொண்ட பெண்ணின் உதவியால் மறுவாழ்வு கிடைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த மாணவன் ஜெயகிருஷ்ணனுக்கும் கோட்டயத்தைச் சேர்ந்த சீதா தம்பிக்கும் இடையே புதிய உறவு தொடங்கியுள்ளது. தாயுள்ளம் கொண்ட சீதாவின் உதவியால் ஜெயகிருஷ்ணன் புதிய வாழ்க்கையைத் தொடங்கவுள்ளார். ஜெயகிருஷ்ணனுக்குக் கேரள மாநிலம் பாலக்காடுதான் பூர்வீகம். 3 வயதில் பெற்றோரைப் பறிகொடுத்த ஜெயகிருஷ்ணன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். மாமா, அத்தை, பாட்டியுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது ஜெயகிருஷ்ணனின் உடல் எடை திடீரெனக் கூடியது. 2017-ம் ஆண்டில் அவருடைய முகம் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படத்தொடங்கியது. திடீரென ஒருநாள் ஜெயகிருஷ்ணனின் பார்வை மங்கத் தொடங்கியது. இதையடுத்து பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றார்.

மருத்துவமனையில் அவருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது சிறுநீரகம் பழுதடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். வறுமையில் வாடினாலும் பேரனுக்கான சிகிச்சையை முன்னெடுத்தார் அவரது பாட்டி. சிறுநீரகம் செயலிழந்ததால் கழிவுகள் வெளியேறாமல் ஜெயகிருஷ்ணன் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன்காரணமாகவே அவரது உடலில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். கிருஷ்ணன் 6மாதம் தொடர் சிகிச்சையில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவச் சிகிச்சை காரணமாக அவரது பள்ளிப்படிப்பு பாதியில் நின்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிகிச்சைக்குப் பிறகும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவரால் நடக்கமுடியாமல் போனது. அவருக்கு டயாலிஸில் செய்ய வேண்டும். உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சமயத்தில்தான் பைஜூ என்பவர் ஜெயகிருஷ்ணணுக்கு டயாலிஸில் சிகிச்சைக்குப் பண உதவி செய்வதற்காக வந்துள்ளார். பைஜூ தயா தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரிடம் சிறுநீரக தேவை குறித்துக் கூறியுள்ளனர். இதையடுத்து பைஜூ மூலம் ஜெயகிருஷ்ணன் குறித்த தகவல்கள் தொண்டு மையத்துக்குச் சென்றடைந்தது.

தொண்டு நிறுவனம் முதலில் ஜெயகிருஷ்ணன் உறவினர்களான அவரது மாமா மற்றும் அத்தையைச் சந்தித்து சிறுநீரக தானம் குறித்து விளக்க முற்பட்டுள்ளனர். அந்தக் குடும்பம் ஏழ்மையான நிலையிலிருந்தது இருந்தது. சிறுநீரகத்தைத் தானமாக அளிக்க முன்வந்தால் வீடு கட்டித் தருகிறோம் என வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால், அவர்களோ இதற்குச் செவிசாய்க்கவில்லை. கிருஷ்ணனைக் கவனிக்கும் பொறுப்பை அந்தத் தொண்டு நிறுவனமே ஏற்றது. இதையடுத்து சிறுநீரக தேவை குறித்து முகநூலில் பதிவு செய்தனர். சீதா தம்பி என்பவர் கிருஷ்ணனுக்கு உதவி செய்ய முனவந்துள்ளர். 47 வயதான சீதா தம்பி தன் கணவர் திலீப்புடன் தொண்டு நிறுவனத்தை அணுகி தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜெயகிருஷ்ணனை நேரில் சந்தித்த சீதாவும் அவருடைய கணவரும் பேசியுள்ளனர். இதையடுத்து சீதாவுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைக்கான அதிகாரபூர்வ ஒப்புதல் பணிகளுக்கு 6 மாதங்கள் ஆகிவிட்டன. மே மாதத்தில் தொடங்கிய பணிகள் நவம்பர் மாதத்தில்தான் முடிந்துள்ளன. சீதா தம்பதியர் டிசம்பர் 8-ம் தேதி தங்களது 23-வது திருமணநாளைக் கொண்டாடிய பின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சீதா. டிசம்பர் 10-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஜெயகிருஷ்ணனுக்கு வெற்றிகரமாக கிட்னி பொருத்தப்பட்டது. சிகிச்சைக்கான செலவைத் தொண்டு நிறுவனமே ஏற்றுக்கொண்டது. உறவுகள் கைவிட்ட நிலையில் சீதாவின் உதவியால் ஜெயகிருஷ்ணன் புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று ஜெயகிருஷ்ணன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அங்கு வந்த சீதா, கிருஷ்ணனை தன்னுடன் அழைத்துச்சென்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவனுக்குப் பெற்றோர்கள் இல்லை கவனிக்கவும் யாருமில்லை. அவன் தனிமையில் இருப்பதை நான் விரும்பவில்லை எனக் கூறி தன்னுடனே கொச்சினுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். மூன்று மாதங்கள் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்பதால் சிகிச்சை முடிந்து பள்ளிப்படிப்பைத் தொடரவுள்ளார். பாலக்காட்டில் ஜெயகிருஷ்ணன் வசித்து வரும் வீடு சுகாதாரமாக இல்லை என்பதால் அவரும் அவரது பாட்டியும் தங்குவதற்காக வீடு கட்டித்தரத் தொண்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கும் தான் உதவுவதாக சீதா கூறியுள்ளார்.