Published:Updated:

`9 மாதக் குழந்தைக்கும் ஹெல்மெட், கூடவே, பாதுகாப்பு உடை!' - அரசின் புதிய விதிகள் என்னென்ன?

Helmet (Representational Image)

இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் பிப்ரவரி 15-ம் நாளிட்ட அறிக்கை ஒன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் சட்டத் திருத்தம் குறித்தத் தகவல்கள் என்ன சொல்கின்றன?

`9 மாதக் குழந்தைக்கும் ஹெல்மெட், கூடவே, பாதுகாப்பு உடை!' - அரசின் புதிய விதிகள் என்னென்ன?

இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் பிப்ரவரி 15-ம் நாளிட்ட அறிக்கை ஒன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் சட்டத் திருத்தம் குறித்தத் தகவல்கள் என்ன சொல்கின்றன?

Published:Updated:
Helmet (Representational Image)

இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைக்குப் பாதுகாப்பு உடை மற்றும் தலைக்கவசம் கட்டாயம் என்று இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் (Ministry of Road Transport and Highways) மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் பிப்ரவரி 15-ம் நாளிட்ட அறிக்கை ஒன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் சட்டத் திருத்தம் குறித்தத் தகவல்கள் என்ன சொல்கின்றன?

Helmet (Representational Image)
Helmet (Representational Image)
Photo by Nandu Vasudevan on Unsplash

இந்திய அரசின் மத்திய மோட்டார் வாகனச் சட்டம், 1988 (1988 ல் 59) பிரிவு 212, துணைப்பிரிவு (1) -ன் கீழ் மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ஐ மேலும் திருத்துவதற்கான வரைவு விதிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதனடிப்படையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், இந்திய அரசிதழில் தனிப்பட்ட, பகுதி II, பிரிவு 3, துணைப்பிரிவு (i) அறிவிப்பு வழியாக, 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 அன்று, மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ல் திருத்தம் செய்வதற்கான சில வரைவு விதிகளை வெளியிட்டது.

அதன் பின்பு, அக்டோபர் மாதம் 25-ம் நாளில், அந்த வரைவு விதிகள் குறித்து 30 நாள்களுக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்கிற வேண்டுகோளையும் முன் வைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனைத் தொடர்ந்து, இந்த வரைவு விதிகள் தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகளைப் பரிசீலித்த மத்திய அரசு, மோட்டார் வாகனச் சட்டம், 1988 (1988 ல் 59) பிரிவு 137 உட்பிரிவு (ஏஏ) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தித் திருத்தியதுடன், மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989, விதி 138ல், துணை விதி (6) க்கு அடுத்ததாக, 7-வது துணை விதியாகப் புதிய விதி ஒன்றைச் சேர்த்திருக்கிறது. புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் அந்த விதியில் தெரிவிக்கப்பட்டிருப்பது:

``மத்திய மோட்டார் வாகனங்கள் (இரண்டாவது திருத்தம்) விதிகள், 2022 வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, ஓர் இருசக்கர வாகனத்தின் ஓட்டுநர், இரு சக்கர வாகனத்தில் குழந்தையை உடன் அழைத்துச் செல்லும் போது, கீழ்க்காணும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

* நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் அமர வைத்து, உடன் அழைத்துச் செல்லும்போது, அந்தக் குழந்தை ஓட்டுராக இருப்பவருடன் பாதுகாப்பு உடுப்பு (Safety Harness) கொண்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

Helmet (Representational Image)
Helmet (Representational Image)

* குழந்தை அணிய வேண்டிய பாதுகாப்பு உடுப்பு, மாற்றியமைக்கக் கூடியதாகவும் (Adjustable), இரண்டு பட்டைகள் இணைக்கப்பட்டு, குழந்தையின் உடல் ஓட்டுநருடன் சேர்ந்திருக்கும்படி இருக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைக்கான பாதுகாப்பு உடுப்பின் பின்புறப் பட்டைகள் மற்றும் தோளின் மேற்பகுதியில் இணைக்கப்படும் பட்டைகள் என்று இரு இணைப்புகளின் வழியாகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இந்தப் பாதுகாப்பு உடை, இந்தியத் தரநிலைச் சட்டம் (Indian Standards Act) 2016 (2016 ல் 11) தெரிவிக்கும், இந்தியத் தரநிலை பணியகம் (Bureau of Indian Standards) வழங்கியிருக்கும் பாதுகாப்புக் கருவிகளுக்கான அனைத்துப் பாதுகாப்புத் தேவைகளையும் நிறைவு செய்வதாக இருக்க வேண்டும்.

* குழந்தைப் பாதுகாப்பு உடையானது குறைந்த எடையுடன், மாற்றியமைக்கக் கூடியதாகவும், நீர்புகாததாகவும், நீடித்து உழைப்பதாகவும் இருக்க வேண்டும்.

* அதிக அடர்த்தி கொண்ட நுரையுடன் கனமான நைலான் அல்லது பல நைலான் இழைகளைக் கொண்டு மெத்தை போன்று இருக்க வேண்டும்.

* 30 கிலோ எடை வரை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் ஒன்பது மாதம் முதல் நான்கு வயது வரையிலான குழந்தையின் தலையில், குழந்தைக்கேற்ற தலைக்கவசம் அல்லது மிதிவண்டிக்கான தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தலைக்கவசம், இந்தியத் தரநிலைச் சட்டம் (Indian Standards Act) 2016 (2016 ல் 11) தெரிவிக்கும் தரத்துடன் இருக்க வேண்டும்.

* நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பின்புறத்தில் அமர வைத்து செல்லும்பொழுது, இரு சக்கர வாகனத்தின் வேகம் 40 கிலோ மீட்டருக்கு அதிகமாக இருக்கக் கூடாது.