Published:Updated:

"பிரதமர் மோடி கோஹினூர் வைரத்தை இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும்!"- வலுக்கும் கோரிக்கைகள்

மோடி, கோஹினூர் வைரம்

"கோஹினூர் வைரம், கடவுள் ஸ்ரீ ஜகந்நாத பகவானுடையது. அது இப்போது இங்கிலாந்து ராணியிடம் உள்ளது" - பிரியதர்சன் பட்நாயக்

"பிரதமர் மோடி கோஹினூர் வைரத்தை இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும்!"- வலுக்கும் கோரிக்கைகள்

"கோஹினூர் வைரம், கடவுள் ஸ்ரீ ஜகந்நாத பகவானுடையது. அது இப்போது இங்கிலாந்து ராணியிடம் உள்ளது" - பிரியதர்சன் பட்நாயக்

Published:Updated:
மோடி, கோஹினூர் வைரம்

மிகவும் பழைமையான, அரிய பொக்கிஷமாகக் கருதப்படும் இந்த கோஹினூர் வைரம் 105.6 காரட் கொண்ட உலகின் மதிப்புமிக்க வைரமாகும். இந்தியாவிற்குச் சொந்தமான இந்த கோஹினூர் வைரம், ஆங்கிலேயர்கள் இந்தியாவை வென்றபோது இங்கிலாந்து வசம் சென்றது. அதன்பிறகு இந்த வைரம் அப்போதைய இங்கிலாந்து பேரரசி விக்டோரியா வசம் ஒப்படைக்கப்பட்டு, அவரது கிரீடத்தில் பொருத்தப்பட்டது.

பின்னர், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெச் வசம் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது அவர் மறைந்த நிலையில் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட அந்த கிரீடம், தற்போது மன்னராகியுள்ள அவருடைய மகன் சார்லஸின் மனைவி ராணி கெமிலா வசம் செல்லவிருக்கிறது.

கோஹினூர் வைரம்
கோஹினூர் வைரம்

இந்நிலையில் இந்த கோஹினூர் வைரம் ஒடிசாவில் உள்ள ஜகந்நாதர் கோயிலுக்குச் சொந்தமானது என்றும் இதை இங்கிலாந்திடமிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார் ஒடிசாவின் சமூக கலாசார அமைப்பான ஸ்ரீ ஜகந்நாத சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்சன் பட்நாயக்.

இதுபற்றிக் கூறிய அவர், "கோஹினூர் வைரம், கடவுள் ஸ்ரீ ஜகந்நாத பகவானுடையது. அது இப்போது இங்கிலாந்து ராணியிடம் உள்ளது. மகாராஜா ரஞ்சித் சிங் தனது விருப்பத்தின் பேரில் அதை ஜகந்நாத கடவுளுக்கு நன்கொடையாக வழங்கினார். அதை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு நமது பிரதமரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.