Published:Updated:

ரூ.1.8 கோடி சம்பளத்துக்கு பேஸ்புக்கில் வேலை; லண்டனுக்குச் செல்லும் விவசாயி மகன்

பிசாக் மொண்டல்

பிசாக் மொண்டலுக்கு கூகுள் மற்றும் அமேசானில் இருந்து வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஆனால் அதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு அதிக சம்பளம் தருவதாகச் சொன்ன பேஸ்புக்கை தேர்வு செய்துள்ளார்.

ரூ.1.8 கோடி சம்பளத்துக்கு பேஸ்புக்கில் வேலை; லண்டனுக்குச் செல்லும் விவசாயி மகன்

பிசாக் மொண்டலுக்கு கூகுள் மற்றும் அமேசானில் இருந்து வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஆனால் அதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு அதிக சம்பளம் தருவதாகச் சொன்ன பேஸ்புக்கை தேர்வு செய்துள்ளார்.

Published:Updated:
பிசாக் மொண்டல்
பிசாக் மொண்டல் என்பவர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவரின் தந்தை விவசாயி, தாயார் அங்கன்வாடி ஊழியராகப் பணியாற்றுகிறார். இப்படி ஒரு சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த பிசாக் மொண்டல் இவரது பெற்றோர் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக ரூ.1.8 கோடி வருடாந்திர ஊதியத்துடன் பேஸ்புக் நிறுவனத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இப்பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு வேலைவாய்ப்புப் பெற்ற மாணவர்களில் இவருக்குத்தான் அதிக சம்பளம். மேலும், பிசாக் மொண்டலுக்கு கூகுள் மற்றும் அமேசானில் இருந்து வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஆனால் அதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு அதிக சம்பளம் தருவதாகச் சொன்ன பேஸ்புக்கைத் தேர்வு செய்துள்ளார். தற்போது இறுதி ஆண்டு பயின்று வரும் இவர் செப்டம்பர் மாதத்தில் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிய லண்டனுக்கு செல்லவதற்காக காத்திருக்கிறார்.

ஜாதவ்பூர் பல்கலைக் கழகம்
ஜாதவ்பூர் பல்கலைக் கழகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது பற்றிக் கூறிய அவர், "இந்த வேலையை ஏற்கும் முன்பு, கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களில் இருந்து எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் ஊதியம் அதிகமாக இருந்ததால், பேஸ்புக்கைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது என்று நினைத்தேன். செப்டம்பரில் பேஸ்புக்கில் பணியாற்ற லண்டன் செல்லவிருக்கிறேன். இது என் நீண்ட நாள் கனவு. நான் வேலை வாய்ப்பைப் பெற்ற பிறகு என் பேராசிரியர்களைச் சந்தித்து ஆசி பெற்றேன். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, பல நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இது என்னை மேம்படுத்திக்கொள்ளவும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெறவும் உதவியாக இருந்தது. " என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.