Published:Updated:

`தந்தை இறந்தது தெரியாமல் பள்ளிக்குச் சென்ற மகள்!’-கேரள ஓட்டுநர் மரணத்தால் கலங்கும் உறவுகள் #Avinashi

பைஜு
பைஜு

பைஜு எல்லோரிடமும் அன்பாகப் பழக்கூடியவர். சமூகப்பணிகளில் அவருக்கு நாட்டம் அதிகம் என உறவினர்கள் கூறுகின்றனர்.

திருப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த சாலை விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். டைல்ஸ் ஏற்றிக்கொண்டு சென்ற கன்டெய்னர் லாரியின் டயர் வெடித்து சென்டர் மீடியனைத் தாண்டி எதிர்திசையில் வந்த கேரள சொகுசுப்பேருந்து மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. கேரள அரசுப்பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர் கிரிஷ், பைஜு ஆகியோரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இவர்கள் இருவரும் இருந்துள்ளனர்.

திருப்பூர் பேருந்து விபத்து
திருப்பூர் பேருந்து விபத்து

விபத்தில் உயிரிழந்த பைஜுவின் மனைவி கவிதா அந்தப்பகுதியில் உள்ள கண் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

பெண்ணைக் காப்பாற்றிய ஹீரோக்கள்!- திருப்பூர் விபத்தில் இறந்த கண்டக்டர், டிரைவரால் வேதனையில் கேரளம்

பைஜுவின் மகள் தன் தந்தை இறந்தது தெரியாமலே பள்ளிக்குச் சென்று தேர்வை எழுதியுள்ளார். பைஜுவின் மகள் பவிதா பைஜு எர்ணாகுளத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வியாழக்கிழமை அன்று பள்ளியில் நடந்த மாதிரித் தேர்வுக்குச் சென்றுவிட்டார். பைஜு இறந்தது அவர்களது குடும்பத்தினருக்குத் தெரிந்திருந்தும் பள்ளிக்குச் சென்ற மகளிடம் எதுவும் கூறவில்லை. பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய பின்னர் தந்தை விபத்தில் பலியானது தெரியவந்துள்ளது. பள்ளி முடிந்தது அந்தச் சிறுமியை அவரது தோழி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின்னர்தான் தந்தை இறந்தது குறித்து தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டதும் அந்தச் சிறுமி அதிர்ச்சியடைந்துள்ளார்.

பைஜு
பைஜு

இதுகுறித்து பேசிய பைஜுவின் உறவினர்கள், ``பைஜு எல்லோரிடமும் அன்பாகப் பழக்கூடியவர். சமூகப்பணிகளில் அவருக்கு நாட்டம் அதிகம். இந்தப்பகுதியில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதற்கான தீர்வைத் தேடுவதில் பைஜு முனைப்புடன் செயல்படுவார். பைஜு கவிதாவுக்கு ஒரே ஒரு குழந்தைதான். பெரிய அளவில் பொருளாதார வசதியில்லை என்றாலும் அந்தக்குடும்பம் மகிழ்ச்சியுடன்தான் இருந்தது. பைஜுவுக்கு மகள் என்றால் பிரியம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு