Published:Updated:

`தமிழகம் மாதிரியான கட்டுப்பாடுகள் இங்கு இல்லை' - மேற்குவங்க சூழலால் கலங்கும் கும்பகோணம் பொறியாளர்

குடும்பத்தினருடன் சுவாமிநாதன்
News
குடும்பத்தினருடன் சுவாமிநாதன்

நான் இங்கு தனியாக சிக்கியிருக்கிறேன். பதற்றம், பயம் ஆகியவற்றால் ஏற்கெனவே உடல்நிலை பாதிக்கப்பட்ட நான், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர், மேற்கு வங்க மாநிலத்தில் பணிபுரிந்துவந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு வர முடியாமல் தவித்துவருகிறார். இதனால் அவரின் குடும்பத்தினர் மிகுந்த மன வேதனையில் இருந்துவருகின்றனர். `நான் உயிருடன் ஊர் திரும்ப முடியாது என்கிற அளவில் என் உடல்நிலை உள்ளது. எனவே, என்னை மீட்டு தமிழகம் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்ணீர்மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

சுவாமிநாதன்
சுவாமிநாதன்

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர், சுவாமிநாதன் (வயது 45). இவருக்கு, வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சுவாமிநாதன் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுருந்திருக்கிறார். லாக்டௌன் அறிவிக்கப்பட்டதால், ஊருக்கு வர முடியாமல் மேற்குவங்க மாநிலத்திலேயே முடங்கியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், தன்னை தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாட்ஸ்அப் வீடியோ மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

பணியில் சுவாமிநாதன்
பணியில் சுவாமிநாதன்

சுவாமிநாதன் அதில் பேசியிருப்பதாவது, ``நான், கடந்த பிப்ரவரி மாதம் கும்பகோணத்திற்கு வந்தேன். பிறகு எனக்கு காலில் பிரச்னை ஏற்பட்டு நடக்க முடியாமல்போனது. பின்னர், அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு, அவசர வேலை காரணமாக மேற்குவங்க மாநிலம் வந்ததுடன், மார்ச் மாதம் 25-ம் தேதி மீண்டும் திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன்.

இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுடன், மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இதனால் ஊருக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு நீடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் எனப் பேச்சு எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் இங்கு தனியாகச் சிக்கியிருக்கிறேன். பதற்றம், பயம் ஆகியவற்றால் ஏற்கெனவே உடல்நிலை பாதிக்கப்பட்ட நான் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். தமிழகம் மாதிரியான கட்டுப்பாடுகளும் முன்னேற்பாடு நடவடிக்கைகளும் இங்கு இல்லை. கொரோனா தொற்றோ அல்லது வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ, நான் உயிருடன் திரும்ப முடியாத நிலை ஏற்படும். இன்னும் 10 நாள்களில் எதுவும் நடக்கலாம். என்னை நம்பியே என் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் உள்ளது.

குடும்பத்தினருடன் சுவாமிநாதன்
குடும்பத்தினருடன் சுவாமிநாதன்
ம.அரவிந்த்

எனவே, தமிழக அரசு எனக்கு உதவிசெய்ய வேண்டும். என்னையும் எனனைப்போன்று வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஊருக்கு வந்தால், கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அரசு விதித்துள்ள விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடிப்பேன். என்னை என் குடும்பத்துடன் சேர்த்து வையுங்கள்" என கண்ணீர் மல்க உருக்கமுடன் கோரிக்கை வைத்துள்ளார்.