Published:Updated:

`காலணிகள் இல்லாமல் ஓடினோம்!’ -குண்டுகள் மற்றும் கொரோனாவுக்கு இடையே சிக்கித் தவிக்கும் கிராமம்

குப்வாரா
குப்வாரா

``சமூக இடைவெளியை எங்களால் கடைப்பிடிக்க முடியவில்லை? எங்களால் வீடுகளில் தனித்திருந்து கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இயலாது. எங்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் கூட்டமாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது”

ஆபத்தான குண்டுகள் மற்றும் அதிகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவித்து வருகிறது, ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் உள்ள குப்வாரா எனும் கிராமம். குப்வாராவை கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுகள் கடுமையாகத் தாக்கியுள்ளன. தாக்குதல்கள் முடிந்து அடுத்தநாள் தங்களது வீடுகளுக்கு மக்கள் திரும்பும்போது வீடுகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், அக்கிராம மக்கள் தங்குவதற்கு இடமின்றித் தவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் அம்மக்களின் நிலை இன்னும் மோசமாகியுள்ளது. இதனிடையே, மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்திலும் மக்கள் உள்ளனர்.

குப்வாரா
குப்வாரா

காஷ்மீரில் உள்ள குப்வாரா கிராமத்தை பயங்கரமான குண்டுகள் தாக்கியுள்ளது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இதில் மூன்று வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா பரவுவதைத் தடுக்க மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்துதலில் இருக்க அரசு அறிவுறுத்தப்பட்ட இந்த நிலையில், குப்வாரா கிராமத்தினர் தங்களது வீடுகளை இழந்து கூட்டமாகப் பாறைகள் நிறைந்த இடங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர். அம்மக்களின் வீடுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதால் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா தொடர்பான அச்சத்தால் அண்மையில் உள்ள கிராம மக்களும் இவர்களுக்கு அடைக்கலம் தர மறுத்து வருகிறார்கள். குப்வாராவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவுவதாக அரசு எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கிராமத்து மக்கள் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றித் தவித்து வருகின்றனர்.

`வெளியூர் பயணமில்லை; டாக்டருக்குக் கொரோனா!’  
-முதல் பாசிட்டிவ் கேஸால் அதிர்ச்சியில் மேகாலயா

தாக்குதல் தொடர்பாக கிராம வாசிகள் பேசுகையில், ``தாக்குதல் தொடங்கியபோது காலணிகள் கூட அணியாமல் எங்கள் வீடுகளை விட்டு வெளியேறினோம். தஞ்சம் அடைவதற்காகப் பக்கத்து கிராமத்திற்குச் செல்லும்போது காவல்துறையினர், நாங்கள் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் பகுதியிலிருந்து வருவதாகச் சொல்லி எங்களை தடுத்து நிறுத்தினர். கிராமவாசிகளும் எங்களுக்கு இடம் கொடுக்கவில்லை. கொரோனா தொற்று ஏற்படுமோ என்று அதிகமாகப் பயந்தனர்” என்று கூறினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் சமூக வலைதளங்கள் வழியாக தங்களது வேதனைகளைப் பகிர்ந்து வந்தனர். அதில், ``சமூக இடைவெளியை எங்களால் கடைப்பிடிக்க முடியவில்லை? எங்களால் வீடுகளில் தனித்திருந்து கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இயலாது. எங்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் கூட்டமாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது” என்று கூறியுள்ளனர்.

குப்வாரா
குப்வாரா

கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் ஷெல் தாக்குதல்களை கைவிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் வாழ அனுமதிக்க வேண்டும் என அக்கிராம மக்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

`இங்க 3 பேருக்குக் கொரோனா தொற்று; கண்டுக்க மாட்டேங்கறாங்க!' -அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்
அடுத்த கட்டுரைக்கு