Published:Updated:

ராஜஸ்தான்: நஹர்கர் உயிரியல் பூங்காவில் இருந்த கடைசி வெள்ளைப் புலி; உடல்நலக் குறைவால் உயிரிழப்பு!

வெள்ளைப் புலி

ராஜஸ்தானில் உள்ள நஹர்கர் உயிரியல் பூங்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று வெள்ளைப் புலிகள் உயிரிழப்பு. பூங்காவில் இருந்த கடைசி வெள்ளைப் புலியான 'சீனோ'வும் தற்போது உரிழந்துள்ளது.

ராஜஸ்தான்: நஹர்கர் உயிரியல் பூங்காவில் இருந்த கடைசி வெள்ளைப் புலி; உடல்நலக் குறைவால் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் உள்ள நஹர்கர் உயிரியல் பூங்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று வெள்ளைப் புலிகள் உயிரிழப்பு. பூங்காவில் இருந்த கடைசி வெள்ளைப் புலியான 'சீனோ'வும் தற்போது உரிழந்துள்ளது.

Published:Updated:
வெள்ளைப் புலி
ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள நஹர்கர் உயிரியல் பூங்காவில் 6 வயதான 'சீனோ' எனும் வெள்ளைப் புலி உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.

இப்பூங்காவில் மொத்தம் மூன்று வெள்ளைப் புலிகள் இருந்த நிலையில் சீதா, ராஜா எனும் வெள்ளைப் புலிகள் உடல்நலக்குறைவால் கடந்த மூன்று ஆண்டுகளில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. அதைத்தொடர்ந்து தற்போது இப்பூங்காவில் இருந்த கடைசி வெள்ளைப் புலியான 'சீனோ' சிறுநீரகத் தொற்றின் காரணமாக உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பூங்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஐந்து புலிகள் மற்றும் ஐந்து சிங்கங்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே அங்குள்ள மக்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பலர் நஹர்கர் உயிரியல் பூங்காவில் விலங்குகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை என்றும் உயிரியல் பூங்கா மயானப் பூங்காவாக மாறிவருகிறது என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுபற்றிக் கூறிய ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியான சுனயன் ஷர்மா, "பெரும்பாலும் இதுபோன்ற உயிரியல் பூங்காக்களில் புலிகளுக்கு சாதாரண ஊழியர்கள்தான் உணவளிக்கிறார்கள். உணவளிப்பதில் சுகாதாரம் இல்லையென்றால் விலங்குகளுக்குச் சிறுநீரகக் கோளாறு, தொற்றுகள் போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்" என்றார். மேலும், விலங்குகளுக்கு அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும். அப்போதுதான் நோய்களை முன்பே அறிந்து உரிய சிகிச்சை அளிக்கமுடியும் என்று மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.