மத்தியப்பிரதேசத்தில் ஷாடோல் மாவட்டத்தில் வழக்கறிஞர் ஒருவர், தான் வாதாடும் வழக்கின் மனுதாரரின் மனைவியை தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பார்தி படேல் எனும் 23 வயதான பெண், விவாகரத்துப் பெற்ற தன் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளார். பிரிந்து வாழும் தன் கணவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக நீதிமன்றத்திற்கு கடந்த வியாழக்கிழமை வந்துள்ளார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், அந்த வழக்கறிஞர் பகவான் சிங் அப்பெண்ணின் பின்னால் ஓடி வந்து, முதுகில் தாக்கி குத்தியுள்ளார். பலரின் மத்தியில் அப்பெண் தாக்கப்பட்டாலும், யாரும் வழக்கறிஞரை தடுக்க முன்வரவில்லை. வழக்கறிஞர் பெண்ணைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து, அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்ட பிரிவான தாக்குதல், காயப்படுத்துதல், பொது இடங்களில் ஆபாசமான வார்த்தைகள் மற்றும் செயல்களில் ஈடுபடுதல் எனப் பல பிரிவுகளின் கீழ் வழக்கறிஞரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.