Published:Updated:

கொரோனாவில் பெற்றோரை இழந்த சிறுமி; கடனைக் கட்டச் சொல்லும் எல்.ஐ.சி -விளக்கம் கேட்ட நிர்மலா சீதாராமன்

எல்.ஐ.சி ( LIC )

இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்.ஐ.சி நிறுவனத்தை டேக் செய்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படியும், தற்போதைய நிலை குறித்து தனக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனாவில் பெற்றோரை இழந்த சிறுமி; கடனைக் கட்டச் சொல்லும் எல்.ஐ.சி -விளக்கம் கேட்ட நிர்மலா சீதாராமன்

இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்.ஐ.சி நிறுவனத்தை டேக் செய்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படியும், தற்போதைய நிலை குறித்து தனக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Published:Updated:
எல்.ஐ.சி ( LIC )

கோவிட் தொற்று காரணமாக, பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அவர்களின் வாழ்வு நிலைகுலைந்துபோனது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் போபாலைச் சேர்ந்த 17 வயது சிறுமி வனிஷா பதக். கோவிட் தொற்றின் இரண்டாம் அலை சமயத்தில் தன்னுடைய பெற்றோரை இழந்தவர். இப்படிப்பட்ட சூழலில் தன் தந்தை வாங்கிய கடனை சிறுமியான இவரை அடைக்கச் சொல்லி தொடர்ந்து எல்.ஐ.சி-யிலிருந்து கடிதம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போபாலைச் சேர்ந்த வனிஷா பெற்றோரை இழந்த பிறகு, தன் தாய்வழி உறவினரோடு வசித்துவருகிறார். இவருக்கு ஒரு தம்பியும் இருக்கிறார். பெற்றோரை இழந்த பிறகு நடந்த பொதுத்தேர்வில்கூட 99.8% சதவிகிதத்துடன் தேர்ச்சிபெற்று சாதித்தவர் வனிஷா. இவருடைய தந்தை ஜீதேந்திரா பதக் எல்.ஐ.சி நிறுவனத்தில் ஏஜென்ட்டாக பணிபுரிந்தவர். பணிபுரிந்த காலத்தில் வீட்டுக்காக 29 லட்சத்தைக் கடனாகப் பெற்றுள்ளார். அவர் இறந்த பின்பு அந்தக் கடனைத் திரும்பச் செலுத்தக் கூறி தொடர்ச்சியாக நோட்டீஸ்களை வனிஷா பெற்றுவருகிறார். கடைசியாக பிப்ரவரி மாதம் அவர் பெற்ற நோட்டீஸில் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டி வரும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொரோனாவில் பெற்றோரை இழந்த சிறுமி; கடனைக் கட்டச் சொல்லும் எல்.ஐ.சி -விளக்கம் கேட்ட நிர்மலா சீதாராமன்

இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்.ஐ.சி நிறுவனத்தை டேக் செய்து இந்த விவகாரம் குறித்துப் பார்க்கும்படியும், தற்போதைய நிலை குறித்துத் தனக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்துப் பேசிய வனிஷா, "என்னுடைய தந்தை Million dollar round table club (MDRT) என்ற இன்ஷூரன்ஸ் கிளப்பில் உறுப்பினராக இருந்தவர். எங்களுடைய பெற்றோரை 2021-ம் ஆண்டு, மே மாதம் இழந்துவிட்டோம். நான், என்னுடைய 11 வயது தம்பி இருவருமே மைனர்கள். எங்களுக்கு வயது குறைவு என்பதால் என் தந்தையின் மாதந்தர பாலிசி மற்றும் கமிஷன் அனைத்தையும் எடுக்க இயலாத நிலையில் இருக்கிறோம். எங்களுக்கு வருமானத்துக்கு எந்த வழியும் இல்லை. கடன்தொகையைத் திரும்பச் செலுத்த அவகாசம் தேவை. 18 வயது நிரம்பிய பிறகு செலுத்துவதைப் பற்றி யோசிக்கலாம்" என்றார்.

இதுவரை வனிஷா பலமுறை எல்.ஐ.சி நிறுவனத்துக்கு இந்த விவகாரம் தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் எந்தத் தெளிவான பதிலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த குறிப்பிட்ட எல்.ஐ.சி நிறுவன அதிகாரிகளோ `வனிஷாவின் கோரிக்கைகள் தலைமை எல்.ஐ.சி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது அங்கிருந்து பதில் வரவில்லை’ எனக் கூறுகிறார்கள். வனிஷாவைத் தற்போது பொறுப்பேற்று பார்த்துக்கொள்ளும் வனிஷாவின் மாமா அஷோக் ஷர்மா கூறுகையில், "நான் இரு குழந்தைகளையும் பார்த்துக்கொள்கிறேன். கடனைத் திரும்பச் செலுத்தும் வகையில் போதுமான நிதி எங்களிடம் இல்லை. வனிஷாவின் தந்தை எல்.ஐ.சி நிறுவனத்துக்காக வேலை செய்தவர். அதனால் எங்கள் கோரிக்கையை நிறுவனம் பரிசீலனை செய்யும் என நினைக்கிறோம். ஆனால் இதுவரை எல்.ஐ.சி-யிடமிருந்து எழுத்து வடிவில் முறையாக எந்த பதிலையும் பெறவில்லை" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism