Published:Updated:

``நாட்டுக்கும் நமக்கும் கிடைத்த நல்வாய்ப்பு இது" - தெற்கு சூடான் அமைதிப்படைத் தளபதி மோகன் பெருமிதம்

லெப்டினென்ட் ஜெனரல் மோகன்

தெற்கு சூடானுக்கான அமைதிப்படைத் தளபதியாக ஜெனரல் மோகனை ஐக்கிய நாடுகளின் சபை அண்மையில் நியமித்தது.

``நாட்டுக்கும் நமக்கும் கிடைத்த நல்வாய்ப்பு இது" - தெற்கு சூடான் அமைதிப்படைத் தளபதி மோகன் பெருமிதம்

தெற்கு சூடானுக்கான அமைதிப்படைத் தளபதியாக ஜெனரல் மோகனை ஐக்கிய நாடுகளின் சபை அண்மையில் நியமித்தது.

Published:Updated:
லெப்டினென்ட் ஜெனரல் மோகன்

நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியின் தலைவராக லெப்டினென்ட் ஜெனரல் மோகன் பதிவி வகித்துவருகிறார். இந்த நிலையில், தெற்கு சூடானுக்கான அமைதிப்படைத் தளபதியாக ஜெனரல் மோகனை ஐக்கிய நாடுகளின் சபை அண்மையில் நியமித்தது. ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைத் தளபதியாக முதன்முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 36 ஆண்டுகள் ராணுவ சேவையாற்றிய அனுபவம்கொண்ட லெப்டினென்ட் ஜெனரல் மோகனுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.

லெப்டினென்ட் ஜெனரல் மோகன்
லெப்டினென்ட் ஜெனரல் மோகன்

வெலிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த லெப்டினென்ட் ஜெனரல் மோகன், ``நாடுகளின் அமைதியைக் காப்பது ஐ.நா சபையின் முக்கியப் பங்காக இருக்கிறது. 1948-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை உலகின் பல்வேறு நாடுகளின் அமைதிக்கு அதிக அளவில் பங்களிப்பு அளித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருந்துவருகிறது. பல ஆண்டுகளாக ராணுவ வீரர்கள், காவல்துறையினர், விமானப் படையினர் அதிகம்கொண்ட நாடாக இந்தியா இருந்துவருகிறது. ஜ.நா சபையின் அமைதிப் பணி நிமித்தமாக நம் எல்லையைத் தாண்டி, நமது படையினர் 160 பேர் மரணமடைந்திருக்கின்றனர். அமைதிக்காக இத்தனை வீரர்கள் உயிர்நீத்த நிகழ்வு வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இது போன்ற சூழலில் தெற்கு சூடான் அமைதிப்படைத் தளபதியாக நம்மை தலைமை ஏற்க இந்தியாவும், ஜ.நா-வும் தேர்வு செய்திருக்கின்றன. இது நமது நாட்டுக்கும், நமக்கும் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!