Published:Updated:

அடிபம்பில் தண்ணீருக்குப் பதில் வந்த கள்ளச்சாராயம்... சோதனைக்குச் சென்ற போலீஸுக்கு வியப்பு!

கள்ளச்சாராய சோதனை ( ட்விட்டர் )

கள்ளச்சாராய சோதனைக்காகச் சென்ற போலீஸார் அடிபம்பில் தண்ணீருக்குப் பதிலாக கள்ளச்சாராயம் வருவதைக் கண்டு வியப்படைந்தனர்.

அடிபம்பில் தண்ணீருக்குப் பதில் வந்த கள்ளச்சாராயம்... சோதனைக்குச் சென்ற போலீஸுக்கு வியப்பு!

கள்ளச்சாராய சோதனைக்காகச் சென்ற போலீஸார் அடிபம்பில் தண்ணீருக்குப் பதிலாக கள்ளச்சாராயம் வருவதைக் கண்டு வியப்படைந்தனர்.

Published:Updated:
கள்ளச்சாராய சோதனை ( ட்விட்டர் )

மத்தியப் பிரதேச மாநிலம், சன்சோட்டா கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதனையடுத்து போலீஸார் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த அடி பம்பு ஒன்று சற்று வித்தியாசமாக தூசி படிந்த நிலையில் இருந்திருக்கிறது. இதைக் கண்ட அதிகாரிகள், அந்த அடிபம்பை அடித்து பார்த்தபோது அதில் தண்ணீருக்கு பதிலாக கள்ளச்சாராயம் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள நிலத்தை தோண்டியபோது 7 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த டேங்கில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் தேவைப்படும்போது சாராயத்தை அடி பம்பில் அடித்து பாலித்தீன் பைகளில் நிரப்பி விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. அதையடுத்து டேங்கிலிருந்து சாராயத்தை வெளியேற்ற முடிவுசெய்த போலீஸார், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடிபம்பில் தண்ணீருக்குப் பதில் சாராயம் வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.