Published:Updated:

மது இலவசமாம்; கிராமத்துக்கு 3 விமான நிலையமாம்... பஞ்சாயத்து தேர்தல் வேட்பாளரின் வைரல் வாக்குறுதிகள்

இந்தியில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகள்

ஹரியானா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

மது இலவசமாம்; கிராமத்துக்கு 3 விமான நிலையமாம்... பஞ்சாயத்து தேர்தல் வேட்பாளரின் வைரல் வாக்குறுதிகள்

ஹரியானா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

Published:Updated:
இந்தியில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகள்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை வாரி வழங்குவது வழக்கம். சில வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். தங்களால் இதை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் வாக்குறுதிகளை கொடுத்து விடுவர். பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தே ஆட்சியை பிடித்து வருகின்றன. இனி வீட்டிற்கு வீடு சாராயம் கொடுப்போம் என்றும், ரேசன் கடையில் சாராயம் விற்போம் என்று மட்டும்தான் அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். தேசிய அரசியலில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள நினைக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் இப்போது இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளை வாரி வழங்கி வருகிறார். கெஜ்ரிவாலையே மிஞ்சும் அளவுக்கு ஹரியானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் இருக்கிறது. அவர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருக்கிறது.

ஷிர்சாத் என்ற கிராமத்தை சேர்ந்த ஜெய்கரன் லத்வால் என்ற வேட்பாளர் கொடுத்துள்ள வாக்குறுதிகள்தான் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தான் வெற்றி பெற்றால் கிராமத்தில் 3 விமான நிலையம் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மது இலவசமாம்; கிராமத்துக்கு 3 விமான நிலையமாம்... பஞ்சாயத்து தேர்தல் வேட்பாளரின் வைரல் வாக்குறுதிகள்

அந்த விமான நிலையத்தில் இருந்து ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அருகில் உள்ள நகரத்திற்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பெட்ரோல் விலையை ரூ.20 ஆக குறைப்பேன் என்றும், சிலிண்டர் விலையை ரூ.100 ஆக குறைப்பேன் என்றும், பிரதமர் நரேந்திர மோடி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரியை நீக்குவேன் என்று தனது வாக்குறுதியில் குறிப்பிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கிராமத்தில் இலவச இணையதள சேவை, பெண்களுக்கு இலவச மேக்அப் கிட், குடும்பத்திற்கு ஒரு இலவச பைக் போன்றவையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கும் மேலாக ஆண் வாக்காளர்களை கவர்வதற்காக மது பிரியர்களுக்கு தினமும் ஒரு பாட்டில் மது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. ஷிர்சாத் கிராமத்தில் இருந்து டெல்லிக்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவேன் என்று தெரிவித்திருக்கிறார். ஜெய்கரன் வைத்திருக்கும் வாக்குறுதிகள் அடங்கிய பேனர் ஒன்றின் புகைப்படத்தை ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த சிலர் தாங்கள் ஜெய்கரன் கிராமத்திற்கு குடியேறுவது குறித்து பரிசீலிப்பதாக பதிவிட்டுள்ளார். மற்றொருவர் பஞ்சாயத்து தலைவராக மட்டுமல்லாது பிரதமர் பதவிக்கும் ஜெய்கரன் போட்டியிடவேண்டும் என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.