``வேலை நிறுத்தம் காரணமாக 32.76% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன!” - போக்குவரத்துத்துறை #LiveUpdates

மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து நாடு முழுவதுமுள்ள தொழிற்சங்கங்கள் 28, 29 ஆகிய இரு நாள்கள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!
``வேலைநிறுத்தம் காரணமாக 32.76% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன” - போக்குவரத்துத்துறை.

கோவை: வேலைநிறுத்தப் போராட்டத்தால் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பேருந்துகள்!
பொது வேலைநிறுத்தம் காரணமாக சென்னை பாரிமுனை பேருந்து நிறுத்தத்தில் குறைவான பேருந்து சேவை. காத்திருக்கும் பொதுமக்கள்!
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இல்லாமல் மக்கள் காத்திருப்பு.
பொது வேலைநிறுத்தம் காரணமாக சென்னையில் பேருந்து சேவை கடும் பாதிப்பு... காத்திருக்கும் பொதுமக்கள்!
இடம்: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை அருகில்
பொது வேலை நிறுத்தம்: நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் குறைந்த அளவிலேயே இயங்கும் பேருந்துகள்.!
பொது வேலைநிறுத்தம் காரணமாக சென்னை பாரிமுனை பேருந்து நிறுத்தத்தில் குறைவான பேருந்து சேவை. காத்திருக்கும் பொதுமக்கள்!விழுப்புரம் பேருந்து நிலையம்:
சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை!
விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள், 28, 29 ஆகிய இரு நாள்கள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்பதால், வங்கி, எல்.ஐ.சி உள்ளிட்ட பணிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்துக்கு மாநில தொழிற்சங்கங்களும் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க தொழிற்சங்கமான எல்.பி.எஃப்., கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன்படி இன்று தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இந்தத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதனால் பஸ் போக்குவரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இன்று திங்கள்கிழமை என்பதால், வேலைக்குச் செல்லும் மக்களும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன்பு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். சென்னையிலும் இன்று11 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் சுமார் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 25 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்கவிருப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.