Published:Updated:

’9 மாத கர்ப்பிணி; நடுவழியில் பிறந்த குழந்தை.. 160 கி.மீ பயணம்’ -புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனை

கர்ப்பிணி
கர்ப்பிணி ( Representational image )

ஊரடங்கு காரணமாக எங்களுக்கு வேலையில்லை. எங்களிடம் சாப்பிடுவதற்கு கூட எதுவும் இல்லை. யார் எங்களுக்கு உதவுவார்கள் என கண்ணீர் வடிக்கின்றனர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.

கொரோனா ஊரடங்கு பலரின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. இந்த லாக்டெளன் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் 9 மாத கர்ப்பிணியான சாகுந்தலா தன் குடும்பத்தினருடன் மகாராஷ்டிராவில் இருந்து மத்தியப் பிரதேசத்துக்கு நடந்து செல்ல முடிவு செய்துள்ளார். நாசிக்கில் குடும்பத்தினருடன் வேலை செய்து வந்துள்ளனர். ஊரடங்கால் வேலை இல்லை. கையில் இருந்த காசும் கரையத் தொடங்கிவிட்டது. வேறு வழியில்லாமல் நாசிக்கில் இருந்து சொந்த ஊரான சாட்னாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். சுமார் 17 நபர்கள் நடைபயணத்தை தொடங்கியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு
vikatan

மே 5-ம் தேதி சாகுந்தலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் நாசிக்கில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவு நடந்துவந்துள்ளார். சாகுந்தலாவுடன் சாட்னாவுக்கு பயணப்பட்ட 4 பெண்களின் உதவியுடன் தேசிய நெடுஞ்சாலையிலே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது, நல்லபடியாக குழந்தையை பெற்றெடுத்தார். அந்தப் பிஞ்சுக்குழந்தையை கையில் அணைத்தபடி மீண்டும் நடக்கத்தொடங்கியுள்ளார்.

`போலீஸாரின் வாழ்க்கையுடன் நான் விளையாட விரும்பவில்லை!' - மதுக்கடை விவகாரத்தில் டெல்லி கமிஷ்னர்

சாகுந்தலா மாநில எல்லையை அடைந்த போது கையில் குழந்தையுடன் அவர் கடந்து செல்வதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கவனித்துள்ளார்.பணியில் இருந்த பெண் காவல் அதிகாரி கவிதா சாகுந்தலாவை அழைத்து விசாரித்துள்ளார். ஊரடங்கால் உணவின்றி தவித்ததும் சொந்த ஊருக்கு நடந்து செல்லும் வழியில் தனக்கு குழந்தை பிறந்த விவரத்தை கண்ணீருடன் விவரித்துள்ளார்.

குழந்தை
குழந்தை
மாதிரிப் படம்

அவரது பேச்சை கேட்ட காவலர்களுக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியவில்லை. சாகுந்தலா தன் குழந்தையுடன் 160 கிலோ மீட்டர் நடந்து வந்துள்ளார்.இதனையடுத்து அவர்கள் அனைவருக்கும் தண்ணீர் உணவு ஆகியவற்றை வழங்க காவல்துறையினர் ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளனர்.

சாகுந்தலாவுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையும் வெறும் கால்களுடன் நடந்து இவர்களுடன் நடந்துவந்துள்ளது. அந்த சிறுமிக்கு காவலர்கள் காலணிகளை வாங்கிக்கொடுத்தனர். இதனையடுத்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான பேருந்து வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

இதுகுறித்து பேசிய சாகுந்தலாவின் கணவர், “ ஊரடங்கு காரணமாக எனக்கு வேலையில்லை. நாசிக்கில் இருந்த நிறுவனங்கள் அனைத்தும் மூடியிருக்கிறது. நாங்கள் அனைவரும் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்தோம். எங்களிடம் சாப்பிடுவதற்கு கூட எதுவும் இல்லை. இங்கே எங்களுக்கு தெரிந்தவர்கள் யார் இருக்கிறார்கள் யார் எங்களுக்கு உதவுவார்கள். அதனால்தான் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டோம். வரும் வழியில் என் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஒரு சீக்கிய குடும்பத்தினர்தான் தேவையான துணிகள் மற்றும் பொருள்களை வழங்கி உதவிபுரிந்தனர்” என கலங்கிய கண்களுடன் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு