Published:Updated:

`இந்தியாவில் ஊரடங்கால் 4 கோடி வெளிமாநிலத் தொழிலாளர்கள் பாதிப்பு!’ - உலக வங்கி

வெளி மாநிலத் தொழிலாளர்கள்
News
வெளி மாநிலத் தொழிலாளர்கள்

ஊரடங்கால், வெளி மாநிலத்தொழிலாளர்கள் வேலை செய்துவந்த நிறுவனங்கள், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகள் என அனைத்தும் நிறுத்தப்பட்டதால், செலவுக்குப் பணமின்றி, உண்ண உணவின்றி, தங்குவதற்கும் சரியான இடமின்றி பெரிதும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் கொரோனாவுக்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்தே மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலைபார்க்கும் அடித்தட்டு வர்க்கத்தினர் சொந்த மாநிலத்துக்கு, வீட்டுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இப்படி, இந்தியாவில் மட்டும் ஊரடங்கால் 4 கோடி பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

வெளி மாநிலத் தொழிலாளர்கள்
வெளி மாநிலத் தொழிலாளர்கள்

21 நாள்களுக்கான ஊரடங்கு அறிவிப்பு வெளிவந்த குறுகிய காலகட்டத்திலேயே 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பேருந்துகளிலும் ரயில்களிலும் நெருங்கியடித்து ஏறிப் பயணித்து அவரவர் ஊர்களுக்குச் சென்று சேர்ந்தனர். ஊரடங்கு நாள்களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பல நூறு கிலோமீட்டர்களுக்கு நடந்தே அவரவர் மாநிலங்களுக்குச் சென்றார்கள். அவர்களில் சிலர் வழியிலேயே உயிரிழந்த சோகமும் நடந்தது. ஒரு நாள் முன்புகூட, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி, தெலங்கானாவிலிருந்து நடந்தே சத்தீஸ்கருக்குச் சென்றபோது, வழியிலேயே மயங்கி விழுந்து இறந்த துயர சம்பவம் நடந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஊரடங்கால், வெளி மாநிலத்தொழிலாளர்கள் வேலை செய்துவந்த நிறுவனங்கள், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகள் என அனைத்தும் நிறுத்தப்பட்டதால், செலவுக்கு பணமின்றி, உண்ண உணவின்றி, தங்குவதற்கும் சரியான இடமின்றி பெரிதும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இவர்களில் பலருக்கு ரேஷன் கார்டும் இருக்காது என்பதால் உதவித்தொகையோ, உணவுப்பொருளோகூட பெற முடியாத நிலை. இதில் ஊரடங்கு எப்போது முடியுமென்று உறுதியில்லாத நிலையில், நடந்தாவது தங்களது மாநிலத்துக்குச் சென்றுவிடலாம் என்று பல நூறு கிலோமீட்டர்களுக்கு நடந்தே செல்ல முடிவெடுக்கிறார்கள்.

வெளி மாநிலத் தொழிலாளர்கள்
வெளி மாநிலத் தொழிலாளர்கள்

21 நாள் ஊரடங்கை மே 3 வரை நீட்டிக்கும் அறிவிப்பு வெளியான அன்று, ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுவதாக வதந்தி பரவ, மும்பை ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான வெளி மாநிலத் தொழிலாளர்கள் குவிந்துவிட்டார்கள். பின்னர், காவல்துறை தடியடி நடத்தி அவர்களைக் கலைந்துபோகச் செய்தது. இந்த நிலை தொடராதிருக்க, இந்தியா முழுவதுமுள்ள வெளி மாநிலத்தொழிலாளர்களின் உணவு, மருத்துவம் மற்றும் போதுமான நிதி உதவியை வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று உலக வங்கி கூறியுள்ளது.