ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர், சுஷ்மா ஸ்வராஜ். டெல்லி சட்டக் கல்லூரியில் படித்தபோது அவரின் சக மாணவர் ஸ்வராஜ் கௌஷல். அப்போது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்தியாவில் எமர்ஜென்சி என்கிற அவசர நிலை கொண்டுவரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இருவரும் அரசியல்ரீதியாக எதிரெதிர் கொள்கைகளைக் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இருந்தார் சுஷ்மா. அதற்கு நேர்மாறான சோசலிஷக் கொள்கைகளைக் கொண்டவராக இருந்தார், ஸ்வராஜ் கௌஷல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆனாலும், அன்பால் இணைந்த அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஆனால், இருவரின் குடும்பத்தினரும் அதற்குச் சம்மதிக்கவில்லை. தன் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி ஸ்வராஜ் கௌஷலை, சுஷ்மா கரம்பிடித்தார்.1975, ஜூலை 13-ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது.

சுஷ்மாவும் ஸ்வராஜும் இணைந்து வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார்கள். எமர்ஜென்சி காலத்தில் ஜார்ஜ் பெர்ணான்டஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீது பரோடா டைனமைட் வழக்கு என்கிற ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், ஜார்ஜ் பெர்ணான்டஸுக்கு ஆதரவாக சுஷ்மாவும் ஸ்வராஜ் கெளஷலும் நீதிமன்றத்தில் வாதாடினார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வட கிழக்கு மாநிலங்கள் தொடர்பான பிரச்னைகளை முழுவதுமாக அறிந்த ஒரு நிபுணராக அறியப்படுபவர், ஸ்வராஜ் கௌஷல். இவர், 1990 முதல் 1993 வரை மிசோரம் மாநில ஆளுநராக இருந்துள்ளார். ஹரியானா விகாஸ் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (1998-2004) இவர் இருந்தார். அப்போது, சுஷ்மா மக்களவை உறுப்பினராக (1998-99) இருந்தார். 2000-2004 காலகட்டத்தில் இவர்கள் இருவருமே மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தார்கள்.

ஸ்வராஜ் தம்பதியின் ஒரே மகளான பன்சுரி ஸ்வராஜும் ஒரு வழக்கறிஞர். இவர், டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார்.
2014-ம் ஆண்டு மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபோது, வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய சுஷ்மா ஸ்வராஜ், பிறகு உடல்நிலை காரணமாக தீவிர அரசியலிலிருந்து விலகினார்.
'சுஷ்மா ஸ்வராஜ் மென்மையானவர்' என்ற பிம்பம் எப்போதுமே உண்டு. ஆனால், பேட்டிகள் என வந்துவிட்டால் சரவெடிதான்! 1999-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 'காங்கிரஸின் கோட்டை' என்று கருதப்படும் பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சோனியா காந்தி நிறுத்தப்படுகிறார். சோனியாவுக்கு எதிராகப் போட்டியிட சுஷ்மா ஸ்வராஜ் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு நமக்கு அளித்த பேட்டியில் அவர் சொல்வதைப் பாருங்கள்.
"நான் சண்டைக்காரி! இந்தியாவின் மானத்தைக் காக்கும் சண்டையில் இறங்கியிருக்கிறேன். ஜெயிக்கும்வரை இந்தத் தொகுதி மக்களை விட்டுப் பிரியப் போவதில்லை"
இந்த அரிய பேட்டி APPAPPO APPல் இன்று வெளியாகியுள்ளது -> http://bit.ly/SushmaSwaraj1999