Published:Updated:

சிலிண்டர் விலை மாதந்தோறும் உயரும் அபாயம்?

காஸ் சிலிண்டர்
காஸ் சிலிண்டர்

மாதந்தோறும் ஒரு சிலிண்டர் மீது 4 ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரை விலையை உயர்த்த முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

எண்ணெய் நிறுவனங்களுக்கு, உற்பத்தி செய்யும்பொருள்களின் விலையை உயர்த்த அனுமதிக்கும் முடிவுகுறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதால், இதனால் சிலிண்டர் விலை இரட்டிப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், கூடுதலாக டெலிவரி சார்ஜ் கேட்டால் கொடுக்கலாமா? #DoubtOfCommonMan

எண்ணெய் நிறுவனங்கள், கடந்த 2016 முதல் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூ. 2 உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. சிலிண்டர் மீதான மானியம் ரத்தாகும் வரை, விலை உயர்த்த அனுமதிக்கப்பட்டது. அதன்பிறகு பலமுறை விலை உயர்த்தப்பட்ட நிலையில், 2017ல் சிலிண்டர் விலை, அரசு அனுமதியுடன் மாதம் ரூ.4 உயர்த்தப்பட்டது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் ஏழை எளிய மக்களுக்கு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு, விலை உயர்த்தும் இந்த திட்டத்திற்கு எதிராக இருப்பதாகக் கருதிய மத்திய அரசு, விலை உயர்த்தும் முடிவை நீக்கியது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு சிலிண்டர்களின் விலையை உயர்த்தாமல் இருந்து வந்த மத்திய அரசு, தேர்வு முடிவு வந்த அடுத்த நாளே விலையை உயர்த்தியது. அதற்கான அறிவிப்பை சிலிண்டர்களை சப்ளை செய்யும் இண்டேன் நிறுவனம் வெளியிட்டது. அதில், வீட்டிற்குப் பயன்படுத்தப்படும் மானியம் இல்லாத சிலிண்டரின் விலையை டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் உயர்த்தியது.

மத்திய அரசு
மத்திய அரசு

டெல்லியில், மானியம் இல்லாத ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.50 உயர்த்தப்பட்ட நிலையில், அதன் விலை ரூ.858.50 ஆனது. அதைத் தொடர்ந்து, சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்ட நிலையில், ஒரு சிலிண்டரின் விலை ரூ.881 ஆனது. விலையை உயர்த்திய அடுத்த சில தினங்களில், மானியம் பெறும் சிலிண்டர்கள் மற்றும் மானியம் இல்லாத சிலிண்டர்கள் என இரண்டையும் மாதந்தோறும் உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஒரு சிலிண்டரின் மீது 4 ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரை விலையை உயர்த்த முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை எண்ணெய் நிறுவனங்கள் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மானிய விலையில் வழங்கும் சிலிண்டருக்கு அரசு அளித்துவரும் மானியத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுவரும் நிலையில், மேலும் பல மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு